May 16

லாலு பிரசாத் வீடு உட்பட 22 இடங்களில் வருமானவரி சோதனை

ராஷ்ட்ரிய ஜனதா தளக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான நிலமோசடி புகாரில் அவரது வீடு உள்ளிட்ட  22 இடங்களில் வருமானவரி சோதனை நேற்று நடைபெற்றது.


ரூ.1000 கோடிக்கு பினாமி பெயரில் நிலமோசடி செய்ததாக லாலு மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் லாலுவின் மகன் குப்தா மற்றும் டில்லி, குர்கான், ரேவரி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் முகவர்கள்  வீடுகள், அலுவலகம் என பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.


லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்ட பினாமி நிலத்தை சட்டத்துக்கு விரோதமாக மாற்றிய வழக்கில் தொடர்புடைய பலரது வீடுகளில் சோதனை நடைபெற்றது.

 


இந்த சோதனையில் சுமார் 100 வருமான வரித்துறை அதிகாரிகளும், ஏராளமான பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். லாலு பிரசாத் யாதவ், அவரது மகளும், பாராளுமன்ற உறுப்பினருமான மிஸா பார்தி, பீகார் அமைச்சர்களாக இருக்கும் அவரது இரண்டு மகன்களும் ரூ.1000 கோடி அளவுக்கு பினாமி சொத்துகளை மாற்றியதாக மாநில பா.ஜ.க. குற்றம்சாட்டியிருந்தது.


இந்த மோசடி குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சோதனை நடைபெற்றது.