Feb 19

வெல்லும் தமிழீழம்- தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு!

வெல்லும் தமிழீழம்- தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு மே பதினேழு இயக்கம் சார்பில்  (18-2-2018) சென்னையில் உள்ள அண்ணா அரங்கத்தில் தொடங்கி நடைபெற்றுறது. தமிழின உரிமைக்காக உயிர கொடுத்த அத்தனை ஈகியர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. புத்தர் கலைக்குழுவின் பறை இசையுடன் மாநாடு துவங்கியது.

பின்னர் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டோர் குத்து விளக்கினை ஏற்றி வைத்தனர். தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கையும், தமிழீழ விடுதலையின் முக்கியத்துவமும் என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் அமர்வில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன், கவிஞர் காசி ஆனந்தன, இயக்குநர் அமீர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.செரீப், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டில் ஏராளமான பொதுமக்களும், இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து மாநாடு நடைபெற்று வருகிற்து.