Feb 19

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!

நிலவை வெகு அருகில் பார்ப்பது போன்ற ஒரு வாய்ப்பு, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ளவர்களுக்கு கிடைத்து உள்ளது.

பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் மத்திய அரசின் கலாசார துறை இணைந்து, நிலவின் அருங்காட்சியகம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அதன்படி, 23 அடி விட்டம் உடைய, நிலவைப் போன்ற மாதிரி, தரையில் இருந்து, 20 அடி உயரத்தில் மிதக்க விடப்படுகிறது. பலுானால் செய்யப்பட்ட இந்த நிலவின் மீது, நாசாவின் உதவியுடன், உண்மையான நிலவின் வடிவம் பெறப்பட்டு, '3டி' தொழில்நுட்பத்தின் மூலம், பிரதிபலிக்கப்படுகிறது.

அதன்படி,  கோல்கட்டாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் இதைப் பார்த்து ரசிக்கலாம். பிரிட்டனைச் சேர்ந்த கைவினைக் கலைஞர், லுாக் ஜெரோம் உருவாக்கியுள்ள, இந்த மாதிரி நிலவு, பெங்களூரு, உதய்பூர், மும்பையைத் தொடர்ந்து தற்போது கோல்கட்டாவுக்கு வந்துள்ளது.உண்மையான நிலவின், ஐந்து லட்சத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்த மாதிரி நிலவு, ஜொலிப்பதை பார்ப்பதற்காக, விக்டோரியா நினைவு அரங்கில் நேற்று, ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துஇருந்தனர்.