Feb 17

பிரான்சில் 1 மில்லியன் யூரோ மதிப்புள்ள வயலின் திருட்டு: இசையமைப்பாளர் கெஞ்சல்

பிரான்ஸ் இசையமைப்பாளார் ஒருவர் தன்னுடைய பேஸ்புக்கில் 1 மில்லியன் மதிப்புள்ள வயலின் திருடுபோய்விட்டதாகவும், அதை பார்த்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரான்சின் Paris-ஐ சேர்ந்தவர் Ophelie Gaillard(43). விருதுகளை வென்றுள்ள இவர் கடந்த வியாழக்கிழமை மாலை தன்னுடைய 18-ஆம் நூற்றாண்டு வயலின் காணமல் போய்விட்டதாக பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.இது குறித்து பதிவேற்றம் செய்துள்ள அவர், எனக்கு உதவுங்கள்.

கடந்த வியாழக்கிழமை மாலை சிவப்பு நிற பெட்டியில் என்னுடைய விலைமதிப்பற்ற வயலினை வைத்திருந்தேன்.அதை ஒரு நபர் என்னை கத்திமுனையில் மிரட்டி திருடிச் சென்றுவிட்டான். வயலின் மிக நீளமாக இருக்கும், அது 1.3 மில்லியன் யூரோ மதிப்பு கொண்டது. அதற்காக நான் CIC வங்கியிடம் கடன் வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலு இது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ள அவர், இந்த தகவலை அனைவருக்கும் பரப்புங்கள் எனவும், தகவல் தெரிந்தால் என்னுடைய பேஸ்புக் பக்கத்திலோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ தகவல் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.