Feb 16

விரிவாக்கம் செய்யப்படும் சுவிஸ் உளவுத்துறை

Federal Intelligence Service (FIS) என்று அழைக்கப்படும் சுவிஸ் உளவுத்துறை தனது பணியில் வேகமாக முன்னேறி வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டு சுவிஸ் உளவுத்துறை 12,500 தகவல்களை வெளிநாட்டு உளவு நிறுவனங்களிடமிருந்து பெற்றது, இது 2016ஐ விட 25% அதிகமாகும்.

அதேபோல் 6000 தகவல்களை பிறநாடுகளுக்கு அனுப்பியது, இது 20% அதிகம்.ஐரோப்பாவில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த உளவுத்துறையின் இந்த வளர்ச்சி அவசியமாகும் என்று சுவிஸ் உளவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் Isabelle Graber தெரிவித்துள்ளார்.

2010க்கும் 2017க்கும் இடையில் சுவிஸ் உளவுத்துறை 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உளவுத்துறைகளுடன் இணைந்து செயலாற்றியுள்ளது.சுவிஸ் உளவுத்துறையின் அலுவலர்களின் எண்ணிக்கையும் 303 ஆக உயர்ந்துள்ளது, கடந்த ஆண்டை விட 17 அதிக அலுவலர்கள் பணியில் இணைந்துள்ளார்கள்.

இதுபோக தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுவதற்காக 23 புதிய பதவிகளை உருவாக்க Federal Council ஒப்புதல் அளித்துள்ளது.அது மட்டுமின்றி சுவிஸ் உளவுத்துறையின் பட்ஜெட் கடந்த ஆண்டை விட 4% அதிகரித்து 75.6 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.