Mar 10

ஸ்டார்கின் விலகல் ஆஸி.க்கு பாதிப்பு

காயத்தால் இந்திய தொடரில் இருந்து மிச்செல் ஸ்டார்க் விலகியுள்ளமை அவுஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கிளார்ச் கூறியுள்ளார்.

பெங்களுரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்கின் கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்த இரண்டு போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அணித்தலைவர் மைக்கல் கிளார்க் கூறுகையில் ''ஸ்டார்க் இல்லாதது மிகப்பெரிய பாதிப்பு. அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருப்பவர் ஸ்டார்க். அவருக்குப்பதில் யாரை அணியில் சேர்ப்பார்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால், அவர் இல்லாதது ஆவுஸ்திரேலிய அணிக்கு கடினமாக நிலையை உருவாக்கும்.

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3ஆவது போட்டி எதிர்வரும் ராஞ்சியில் 16திகதி ஆரம்பமாகின்றது.