May 16

விரைவில் சந்தைக்கு வரும் ’Moto’ ஸ்மார்ட்போன் மாடல்கள்; இணையத்தில் லீக்கான ரகசியம்

விரைவில் சந்தைக்கு வரும் ’Moto’ ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்த தகவல் இணையத்தில் லீக்கானது.

புதிதாக சந்தைக்கு வரவுள்ள ஸ்மார்ட்போன்களின் ஒரு சில மாடல்கள் இணையத்தில் லீக்காவது வழக்கமான ஒன்று. ஆனால் 2017ஆம் ஆண்டில் வெளியாக உள்ள லெனோவா – மோட்டோவின் அனைத்து மாடல்கள் குறித்த தகவல்களும் வெளியாகிவிட்டன.

அந்நிறுவனத்தின் அலுவலகக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட பிரசண்டேஷன் ஸ்லைடு ஒன்று அப்படியே படம் பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவை Moto Z, Moto X, Moto G, Moto E, Moto C ஆகியவை ஆகும். Moto G, Moto E போன்றவை சந்தையில் ஏற்கனவே வெளியிடப்பட்டாலும், புதிய அம்சங்களுடன் மீண்டும் மறுபதிப்பாக வெளியாகவுள்ளது.