Mar 10

தீயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட ஃரோன்

நியூயோர்க் தீயணைப்பு படையினர் வைத்திருந்த டிரோன் (ஆளில்லா விமானம்) சில தினங்களுக்கு முன் ஆறு மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த பயன்படுத்தியுள்ளனர். 

தரையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்ட ஃரோன் தீப்பிடித்த கட்டிடத்தை சுற்றி பறக்க விடப்பட்டது. 

கட்டிடத்தை சுற்றி பறந்த நிலையில் டிரோன் பதிவு செய்த வீடியோக்களை கீழே இருந்து பார்த்த தீயணைப்பு துறையினர், சாமர்த்தியமாக தீயை கட்டுப்படுத்தினர். 85,000 டொலர்கள் மதிப்புடைய ஃரோன் சிறிய கேபிள் மூலம் திரையில் இணைக்கப்பட்டது. 

விலை மதிப்புடைய இந்த ஃரோன் கடந்த எட்டு மாதங்களாக பயன்படுத்தப்படாமல் முதற்கட்டமாக பயிற்சி அடிப்படையிலேயே இந்த ஃரோன் பயன்படுத்தப்பட்டது என நியூ யோர்க் தீயணைப்பு பிரிவு  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.