May 16

அன்பு மகளுக்கு ரெய்னாவின் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது மகளுக்கு அழகாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரெய்னாவுக்கு கிரேசியா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.

இன்று தனது மகள் முதலாவது பிறந்தநாளை கொண்டாடுகிறாள். ரெய்னா தனது டுவிட்டரில், ஒரு வருடம் முன்பாக எங்கள் வாழ்க்கைக்குள் நீ வந்தாய். பெரும் வெளிச்சம், மகிழ்ச்சியோடு எங்களுடன் நீ வளர்கிறாய்! ஹேப்பி பர்த் டே கிரேசியா!\" என டிவிட்டரில் மகள் புகைப்படத்தை போட்டு வாழ்த்தியுள்ளார்.

பிங்க் நிற ஆடையில் குழந்தை மிக அழகாக இருக்கிறது. குழந்தை கிரேசியாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.