Mar 10

கனேடிய இராணுவத்தில் பெண்களின் பங்களிப்புக்களும் சாதனைகளும்

சர்வதேச பெண்கள் தினம் அனுட்டிக்கப்படும் இந்நாட்களில் கனேடிய இராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை நினைவுகூருவது பொருத்தமானதொன்றாகும். இராணுவம், படை, யுத்தம் என்றவுடன் நினைவுக்கு வருவதெல்லாம் வீரர்களே என்ற ஒரு கால கட்டத்தைப் பின்தள்ளி, பெண்களும் ஆண்களுக்கு நிகராக யுத்தகளங்களில் வீரச்சமர் புரிவது தற்காலத்தில் புதிதானதொன்றல்ல.

பெண்கள் கனேடிய இராணுவத்திற்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தமது பங்களிப்பை ஆற்றிவருகின்றனர்.  அவர்களது பல சாதனைகளுள் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ஆவன:

1885 ஆம் ஆண்டு – கனேடிய இராணுவத்தில் முதலாவது பெண் மருத்துவத் தாதியாகப் பணிக்கமர்ந்தார்.

1996 ஆம் ஆண்டு – Wafa Dabbagh என்பவர் கனேடிய ஆயுதப் படைகளின் மு “ஹிஜாப்” அணிந்த முதலாவது பெண் அங்கத்துவர் ஆனார்.

1979 ஆம் ஆண்டு – கனேடிய இராணுவக் கல்லூரிகள் பெண்களுக்கு தமது கதவுகளைத் திறந்தன.

2001 ஆம் ஆண்டு- பெண்கள் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது.