Feb 14

காங்கிரஸ் தலைவர்கள் மீது எடியூரப்பா கடும் தாக்கு

டிவிட்டரில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது பாஜக தலைவர் எடியூரப்பா கடும் தாக்குதல் நடத்தியுள்ளார். டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கு எதிராக எடியூரப்பா கூறியிருப்பதாவது:

கர்நாடக மாநிலத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்யும்போது இந்து கோவில்களுக்கு சென்றுள்ளார். இந்து கோவில்களுக்கு செல்வதை நாங்கள் குறைகூறவில்லை. நாட்டுக்கோழி சாப்பிட்டு விட்டு லட்சுமிநரசிம்மசுவாமி கோவிலுக்கு சென்றது தவறாகும். 

இதுபோல் முதல்வர் சித்தராமையா, மீன் சாப்பிட்டு் விட்டு தர்மஸ்தலா கோவிலுக்கு சென்றுள்ளார். தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் இதுபோன்ற அரசியல் நாடகத்தை நடத்துகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் சந்தர்ப்பவாதிகள். இதை மாநில மக்கள் நன்றாக அறிந்துள்ளனர் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.