May 16

சாதனைகளால் புதிய சூப்பர் ஸ்டாராக உருவாகி வரும் தல அஜித்

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விவேகம்’ படம் மிக பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் டீசர் தற்போது புதிய சாதனைகளை படைத்து வருகின்றது. விவேகம் பட டீசர் கடந்த வியாழக்கிழமை (11.05.2017) நள்ளிரவு 12.01க்கு வெளியானது. டீசர் வெளியான 4 நாட்களிலேயே 1 கோடியை தாண்டி பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.இந்த சாதனை ரஜினியின் ‘கபாலி’ பட டீசர் வெளியான பொழுது 72 மணி நேரத்தில் படைத்தது.

ஆனால் அஜித்தின் ‘விவேகம்’ பட டீசர் இந்த சாதனையை 68 மணி நேரத்திலேயே படைத்திருப்பது, அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அஜித் படங்களிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட டீசர் என்ற பெருமையை இந்த டீசர் பெற்றுள்ளது.

மிக பிரமாண்டமாக, அதிக செலவில் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அறிமுக நாயகி அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு சிவாவின் துள்ளிய இயக்கமும், அஜித்தின் கெத்தான ஸ்டைல், அனிருத்தின் பட்டைய கிளப்பும் இசை, கபிலன் வைரமுத்துவின் கம்பீர வசங்கள் மிகுந்த பலத்தை கொடுத்துள்ளதே இப்படம் பிரமாண்டமாக உருவாக காரணம் என கூறப்படுகிறது.