Feb 13

தமிழர்களது ஒற்றுமையே இனத்தைக் காக்க வல்லது!!

தமி­ழிலே ஒரு முது மொழி ‘‘ அர­சன் அன்­ற­றுப்­பான் தெய்­வம் நின்­ற­றுக்கும்’’ என்­ப­தா­கும். இந்த முது­மொ­ழி­யின் தாக்­கத்தை இலங்­கை­யின் இறை­மை­யில் தெளி­வா­கக் காண­லாம்.

ஆங்­கி­லே­யர் கையில் இருந்த இறைமை சுதந்­தி­ரம் என்ற பெய­ரில் சிங்­கள இனத்­தின் கைக்கு மாறி­யது. மூவி­னத்­த­லை ­மை­க­ளின் ஒற்­று­மை­யி­னால் பிறந்­த­து­தான் சுதந்­தி­ரம். சுதந்­தி­ரம் என்­பது ஒவ்­வொரு மனி­த­னின் பிறப்­பு­ரி­மை­யா­கும். இந்­தப்­பி­றப்­பு­ரிமை சிறு­பான்மை இனத்­தைப் பொறுத்த மட்­டில் கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கின்­றது.

திட்­ட­மிட்­டுக் காய் நகர்த்­திய நாட்­டின் 

முத­லா­வது தலைமை அமைச்­சர் டி.எஸ்.

இலங்­கை­யின் முதல் தலைமை அமைச்­சர் டி.எஸ் சேன­நா­யக்க. சிங்­கள மக்­கள் அவ­ரைத் தேச­பி­தா­வா­கக் கரு­து­கி­றார்­கள். அவ­ரைப்­பற்­றிய தமி­ழர்­க­ளின் மதிப்­பீடு அவர் ஒரு சூத்­தி­ர­தாரி. இலங்­கைப்­பி­ரச்­சி­னைக்கு வித்­திட்ட முதல் முதல்­வர் அவர். பெரிய தந்­தி­ர­சாலி. அவ­ரது செயற்­பா­டு­கள் எப்­படி அமைந்­தவை என்­ப­தைப் பாருங்­கள். அவ­ரது நோக்­கம்– குறிக்­கோள் தமி­ழி­னம் சிறு­பான்மை இனம் தான். ஆனால் அன்­றைய அர­சி­யல் வானில் நட்­சத்­தி­ரங்­க­ளாக ஔி வீசி­ய­வர்­கள். அவர்­கள் பெரு­மை­யைப் புக­ழைக்­கண்டு அவ­ரது எண்­ணங்­கள், தமி­ழி­னத்தை எப்­படி அடக்­க­லாம் ஒடுக்­க­லாம் எனச்­சிந்­திக்க வைத்­தது.

இரு ஆயு­தங்­க­ளைக் கையி­லெ­டுத்­தார். ஒன்று நாடா­ளு­மன்­றில் எம்­மின உறுப்­பி­னர் தொகையை எப்­படி குறைக்­க­லாம் என்­ப­தாக அமைந்­தது. இரண்­டா­வது, தமி­ழர் வாழ்­வி­டங்­க­ளில் திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்­திச் சிங்­கள உறுப்­பி­னர் தொகையை நாடா­ளு­மன்­றத்­தில் அதி­க­ரிக்­கச் செய்­ய­லாம் என்­ப­தா­கும்.

சுதந்­தி­ரம் பெற்ற கையோடு பிரசா உரி­மைச் சட்­டத்­தை­யும் வழக்­கு­ரி­மைச்­சட்­டத்­த­தை­யும் கொண்­டு­வந்து நாடா­ளு­மன்­றத்­தில் மலை­யக மக்­க­ளது உறுப்­பி­னர் தொகை­யைக் குறைத்­தார். கிழக்­கி­லங்கை தமி­ழர் வாழ்­வி­டங்­க­ளைக் கொண்ட பூமி, செந்­நெல் விளை­யும் கள­னி­கள் மிகுந்த இடம். இந்­தப்­பூ­மி­யிலே திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற் றங்­களை ஏற்­ப­டுத்­தி­னார். விளைவு என்ன? சிங்­கள மக்­க­ளின் பரம்­பல் அதி­க­ரித்­தது. சிங்­கள உறுப்­பி­னர் தோன்­றத் தொகு­தி­கள் பல தோற்­றம் பெற­லா­யின.

தமி­ழர்­க­ளது செயற்­றி­றன் கண்டு 

பொறாமை கொண்ட சிங்­க­ளத் தரப்­புக்­கள்

படிக்­காத மேதை­யான டி.எஸ்­சின் தேவை என்ற நிலை ஏற்­பட்ட போது இலங்­கை­யின் தேசி­யக் கொடி எப்­ப­டி­யாக அமைய வேண்­டு­மென ஒரு குழு­ஆ­ராய்ந்­தது. மூவின மக்­க­ளின் உறுப்­பி­னர்­க­ளும் அக்­கு­ழு­வில் இடம்­பெற்­றி­ருந்­த­னர். அக்­கொ­டி­யில் சிங்­கம் என்ற சின்­னமே இடம்­பெற வேண்­டு­மென்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­ட­போது அன்­றைய தமிழ்த்­த­லை­மை­க­ளில் ஒரு­வ­ரான சி. சுந்­த­ர­லிங்­கம் நந்­தி­யும் அக்­கொ­டி­யில் இடம் பெற­வேண்­டு­மென வாதிட்­டார்.

அந்­நி­லை­யில் தமிழ் தலை­மை­கள் ஒன்­றாக இணைந்து ஒரு­கு­ர­லாக ஓங்­கிக் குரல் எழுப்­பி­யி­ருந்­தால் நந்­தி­யும் இலங்­கை­யின் தேசி­யக் கொடி­யில் இடம்­பெற்­றி­ருந்­தது. முஸ்­லிம் தலை­மை­க­ளும் பிறை­யைத் தமது சின்­ன­மாக ஏற்­க­வேண்­டு­மெ­னக் கேட்­டி­ருப்­பார்­கள்.

தூர­நோக்­கும் பரந்த எண்­ண­மும் அன்­றைய தலை­மை­க­ளி­டம் வழக்­கில் இல்­லா­த­தால் சிங்­கமே சின்­ன­மாக இலங்­கைக் கொடி­யில் அமைந்­து­விட்­டது. தமிழ் இனத்­தி­ன­தும் முஸ்லிம் இனத்­தி­ன­தும் அடை­யா­ள­மாக அக்­கொ­டி­யில் பச்சை, மஞ்­சள் நிறத்­தில் இரு­கோ­டு­கள் வரை­யப்­பட்­டுள்­ளன. இந்த நிலை­யில் சிறு­பான்மை இனத்­த­வர்­கள் ஒன்­றிய மன­தோடு அக்­கொ­டிக்கு மரி­யா­தை­யும் வணக்­க­மும் செலுத்­து­கி­றார்­களா? இல்­லையே! அத்­த­கைய நிலை­யில் எப்­படி இலங்­கை­யில் நல்­லி­ணக்­கம் ஏற்­பட முடி­யும்?

ஜீ.ஜீ.பொன்­னம்­ப­லத்­தின் அர­சி­யல் 

அணு­கு­முறை மீது அதி­ருப்தி கொண்டு 

புதிய கட்­சியை உரு­வாக்­கிய 

எஸ்.ஜே.வி. செல்­வ­நா­ய­கம்

அன்­றைய கால­கட்்­டத்­தில் தமி­ழர்­க­ளின் தலைமை கண­ப­திப்­பிள்ளை காங்­கே­யர் பொன்­னம்­ப­லத்­தின் கையி­லி­ருந்­தது. (ஜீ.ஜீ.பொ) டீ.எஸ்.சின் மந்­திரி சபை­யிலே கைத்­தொ­ழில் அமைச்­ச­ராக ஜீ.ஜீ.பொன்­னம்­ப­லம் வீற்­றி­ருந்­தார். டீ.எஸ் சின்­போக்­கை­யும் தமி­ழர்­களை ஒடுக்க அவர்­கை­யாண்ட சட்ட திட்­டங்­க­ளை­யும் கண்ட எஸ்.ஜே.வி செல்­வ­நா­ய­கம் உள்­ளம் குமு­றி­னார். இலங்­கை­யில் தமி­ழர் இருக்­கையை எப்­ப­டித்­தங்க வைக்­க­லாம் என்ற கோணத்­தில் சிந்­த­னை­ யைப்­ப­ட­ர­விட்­டார்.

பொன்­னம்­ப­லம் அவர்­க­ளில் தலை­மை­யி­லி­ருந்து வௌியே­றித் தமக்­கி­சைந்­த­வர்­க­ளு­டன் இணைந்து தமி­ழ­ர­சுக்­கட்­சியை உரு­வாக்­கி­னார். கட்­சி­யின் கொள்­கை­களே கட்­சி­யின் உயி­ரா­கும் என்­றும் கட்­சிப்­ப­ணி­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளைக் கட்­சி­யின் நிழல்­க­ளென்­றும் அறி­வு­றுத்­தி­னார். பிர­தே­ச­வா­ரி­யா­கப்­பி­ரிந்த தமி­ழி­னத்தை ஒரே குடை­யின் கீழ் கொண்டு வந்­தார். கட்­சித் தலை­மை­க­ளை­யும் இணைப்­பித்­தார். அவர் வழி­யில் தமி­ழி­னம் ஒன்று திரண்­டது. அந்த ஒற்­றுமை என்ற வலு­வைக்­கொண்டு சிங்­க­ ளத்­த­லை­மை­க­ளைப் பணிய வைத்து ஒப்­பந்­தம் செய்­தார்.

இலங்­கை­யின் ஆட்சி மொழி சிங்­க­ளமே என்ற சட்­டத்­தை­யும் சிங்­க­ளமே போதனா மொழி­யாக இருக்­க­வேண்­டும் என்ற திட்­டத்­தை­யும் மாற்­றி­ய­மைத்­தார்.

‘சிலோன்’ என்று அழைக்­கப்­பட்ட இலங்­கை­யின் பெயரை சிறீ­லங்­கா­வா­கச் சிங்­கள அரசு மாற்­றம் செய்­த­போது, மும்­மொ­ழி­க­ளி­லும் ஸ்ரீலங்கா என்று எழு­தத் தலைப்­பட்­ட­னர். அன்று முத­லின் ஐந்து ரூபா தமி­ழில் ஸ்ரீலங்க என்று பொறிக்­கப்­பட்­ட­தைக் கண்­ணுற்ற தந்தை செல்வா அன்றை பிர­த­மர் ஸ்ரீமாவை நேரே போய்ச்­சந்­தித்­துத் தமி­ழில் இலங்கை என்றே எதி­லும் எழு­தப்­ப­ட­வேண்­டும் எனக் கேட்டு நடை முறை­யில் அதைச் செயல் படுத்­தி­னார்.

இது­வொரு வர­லாற்­றுப் பதிவு. தமி­ழர் சிறு­பான்­மை­யி­னர். எந்­தக்­கட்­டத்­தி­லும் ஆயு­தம் எந்­தக்­கூ­டாது ஏந்­தி­னால் பேர­ழி­வைச் சந்­திப்­போ­மென வற்­பு­றுத்­திச் சாத்­வீக முறை­யில் போராட்­டங்­களை நடத்­திக் காட்­டி­னார். அவர் சுட்­டிக்­காட்­டிய அடுத்த தலைமை, துப்­பாக்கி வேட்­டுக்கு இரை­யா­னது தமி­ழி­னத்­தின் சாபக்­கேடே அடுத்த தலைமை சம்­மந்­தன் ஐயா தந்தை வழி­யில் தனை­யன் என்ற நெறி­யில் தமி­ழி­னத்தை வழி­ந­டத்­து­கி­றார்.

ஆயு­தப் போராட்­டம் நடந்­தி­ருக்­கக் கூடாது; ஆனால் அது நடந்து விட்­டது. எம்­மி­னம் வீரத்­தின் விளை­நி­லம் என்­பதை வெகுண்­டெ­ழுந்த இழை­ஞர் அணி உல­கிற்கே எடுத்­துக்­காட்­டி­யது. தியா­கத்­தீ­யில் தம்­மைத்­தாமே ஆகு­தி­யாக்­கி­னார்­கள் போர்க்­க­ளத்­துக்கு பெட்­டி­யைச் சுமந்து சென்­டறு அப்­பெட்­டி­யி­லேயே சட­ல­மா­கத் திரும்­பி­வந்த காட்­சியை உல­கில் எந்த நாட்­டி­லும் கண்­ட­துண்டா? அல்­லது கேட்­ட­துண்டா? உல­கம் கண்டு வியந்­தது.

‘‘நீங்­கள் உங்­கள் உரி­மை­யைக் கேளுங்­கள். அதில் தவ­றொன்­று­மில்லை.’’ அந்த உரி­மை­க­ளைப்­பெற முயன்ற செயற்­பா­டு­க­ளிலே இருந்த தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்டி அவற்­றைத் தவிக்­கு­மாறு கூறி­யது. அத்­த­வ­று­களை விலக்­கிக் கொள்­வதை அமைப்பு கருத்­தில் கொள்­ளா­த­தால் அவர்­களை அழிக்­க­வும் செய்­த­னர். ‘‘அர­சி­யல் பிழைத்­தோ­ருக்கு அம் கூற்­றா­கும்’’ என்­பது தமி­ழர் செல் நெறி­யா­கும். அற­நெ­றி­யின் குறை­பாட்­டால், உரி­மைப்­போர் தோல்வி கண்­டது.

இன்­றைய தேர்­தல் களம் கண்டு இன்­றைய தலை­மு­றை­க­ளுக்கு எடுத்­துக்­கூ­றும் செய்தி இது. ஒற்­று­மைக்கு வேட்டு வையா­தீர்­கள். ஒற்­று­மை­யால் தான் இன்­றும் தலை நிமிர்ந்து நிற்­கி­றோம். எனவே என்­ன­தான் கருத்து வேற்­று­மை­கள் ஏற்­பட்­டா­லும் இனத்­தின் ஒற்­றுமை நலி­வ­டைய இட­ம­ளிக்­கா­தீர்.