May 16

தேசிய அரசியலில் இருந்து விலகும் றோனா அம்ரோஸ்

தேசிய பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருக்கும் றோனா அம்ரோஸ் தேசிய அரசியலில் இருந்து விலகஉள்ளமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இந்த முடிவு பற்றி அவர் ஏற்கனவே கட்சிக்குத் தெரியப்படுத்தி உள்ளதாகவும் நாளைய தினம் அவர் இந்த விலகல் முடிவு பற்றி ஒட்டாவாவில் அறிவிக்க உள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

எதிர்வரும் 27 ஆம் திகதி அன்று பழமைவாதக் கட்சி தனது புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என்றும் அதுவரை றோனா அம்ரோஸ் அவர்களே தலைமைப் பதவியில் தொடர்வார் எனவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.