Feb 10

முல்லைத்தீவில் வாக்காளர்களுக்கு கசிப்பு வழங்கிய தமிழரசுக்கட்சியினர் சிக்கினர்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்றுவருகின்ற நிலையில் வாக்காளர்களுக்கு கசிப்பு வழங்கிய தமிழரசுக்கட்சியினர் முல்லைத்தீவில் இரண்டு பகுதிகளில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பகுதியில் தமிழரசுக்கட்சி உறுப்பினர் ஒருவர் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கச் சென்றவர்களை இடைமறித்து கசிப்பு வழங்கியிருக்கின்றனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சம்பந்தப்பட்டவர்களை ஆதாரத்துடன் பிடித்திருக்கின்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.