Feb 10

பரிஸ் - செம்மஞ்சள் எச்சரிக்கை! - மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்!!

 வெள்ளிக்கிழமை பரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகலோடு ஈஃபிள் கோபுரம் பொதுமக்களுக்காக மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக நீடிக்கும் மோசமான காலநிலை காரணமாக, வெள்ளிக்கிழமை காலை வரை ஈஃபிள் கோபுரம் பொதுமக்களுக்காக மூடப்பட்டுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டில் ஈஃபிள் கோபுரத்துக்கு 6 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.