May 15

விண்ணில் செலுத்தப்படவுள்ள உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள்

தமிழக மாணவர் ரிஃபாத் ஷாரூகினால் உருவாக்கப்பட்ட உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளானது அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

64 கிராம் எடை கொண்டுள்ள செயற்கைக்கோளுக்கு கலாம்செட் என பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி  எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படவுள்ள நாசா ரொக்கெட் சுமந்து செல்லவுள்ளது.

ரிஃபாத் வடிவமைத்துள்ள செயற்கைக்கோளின் திட்டப்பணிகள் 240 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்றும் 12 நிமிடங்களுக்கு விண்வெளியின் மைக்ரோகிராவிட்டியில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.