May 15

சீனாவில் பியானோ வாசித்த ரஷிய அதிபர் புதின்

சீனாவில் ‘புதிய பட்டு சாலை’ திட்ட மாநாட்டில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபரின் இல்லத்தில் இருந்த பியானோவை வாசித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் ‘புதிய பட்டு சாலை’ திட்ட மாநாடு நடந்தது. இதற்கான ஏற்பாட்டை சீனா செய்து இருந்தது. அதில் ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் கலந்து கொண்டார்.

முன்னதாக மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களை சீன அதிபர் ஸி ஜின்பிங் தனது இல்லத்தில் சந்தித்தார்.

அதற்கு முன்பு காத்திருந்த விளாடிமிர் புதின் சீன அதிபரின் இல்லத்தில் இருந்த பியானோவை வாசித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவர் சோவியத் ரஷியா காலத்தைய பாடல்களை பியானோவில் இசைத்தார்.

64 வயதான புதின் பன்முக திறமை படைத்தவர். துணிச்சல் மிகுந்தவர். ஏற்கனவே அவர் சைபீரியாவில் குதிரை சவாரி செய்துள்ளார். பல தடவை தீயணைப்பு விமானங்களை இயக்கியுள்ளார். கருங்கடல் மற்றும் பைசால் ஆழமான பகுதியில் நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார்.