Feb 08

குறைந்த விலையில், நிறைந்த அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

பானசோனிக் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.0 இன்ச் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ், குவாட்கோட் மீடியாடெக் சிப்செட் 1 ஜிபி, 2 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

பானசோனிக் P100 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், பின்புற கைரேகை சென்சார் மற்றும் 2200 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறதுபானசோனிக் P100 சிறப்பம்சங்கள்:

- 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ்

- 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 64-பிட் பிராசஸர்

- மாலி-T720 GPU

- 1 ஜிபி /2 ஜிபி ரேம்

- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்

- கைரேகை சென்சார்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 2200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

நீலம், தங்கம் மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கும் பானசோனிக் P100 ஸ்மாப்ட்போனின் 1 ஜிபி ரேம் கொண்ட மாடல் விலை ரூ.5,299 என்றும் 2 ஜிபி ரேம் மாடல் ரூ.5,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களின் விற்பனை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.