Feb 06

விவோ வி7 பிளஸ் காதலர் தின ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் செல்ஃபி எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போனான வி7 பிளஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக ஷேம்பெயின் கோல்டு, மேட் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்ட வி7 பிளஸ் பின் எனர்ஜெடிக் புளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனின் இன்ஃபனைடே ரெட் நிற ஸ்மார்ட்போன் காதலர் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ராவுடன் இணந்து புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

காதலர் தினத்தை கொண்டாடும் இளைஞர்களை கவரும் வகையில் காதலுக்கு எல்லையில்லை என்ற தலைப்பில் காதலின் சர்வதேச நிறத்தில் பல்வேறு எமோடிகான்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவோ வி7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

- 5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்

- அட்ரினோ 506 GPU

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஃபன்டச் ஓ.எஸ். 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்

- டூயல் சிம் ஸ்லாட்

- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்

- 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்

- கைரேகை சென்சார்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3225 எம்ஏஎச் பேட்டரி

இந்தியாவில் விவோ வி7 பிளஸ் இன்ஃபனைட் ரெட் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்திலும், ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு புக் மை ஷோ, ஃபெர்னஸ் என் பெட்டல் வழங்கும் சிறப்பு கூப்பன்கள் மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.