Feb 06

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு - ஒரு மில்லியன் யூரோக்கள்!

இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் 270 நகரங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன என மாகாணத்தின் தலைவர் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களாக பிரான்சை ஆட்கொண்டிருக்கும் வெள்ள பிரச்சனை இதுவரை முடிவுக்கு வரவில்லை.

இல்-து-பிரான்சுக்குள் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. RER C இதுவரை வழமைக்குத்திரும்பாத நிகையில், அவசர உதவியாக இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse, ஒரு மில்லியன் யூரோக்கள் ஒதுக்கியுள்ளதாக இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இது முதல்கட்ட நிதி உதவி மாத்திரமே எனவும், முழுதாக எவ்வளவு பணம் தேவைப்படும் என தெரியவில்லை எனவும், மேலதிகமாக தேவைப்படும் பட்சத்தில் உதவித்தொகை அதிகரிக்கப்படும் எனவும் குறிபிட்டுள்ளார்.

இந்த வாரம் பிரான்சில் மிக கடுமையான பனி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவசரகால நடவடிக்கைகள் தொடர்ந்தும் துரிதப்படுதப்பட்டுள்ளன.