May 15

பஸ் ஸ்டிரைக் : எந்த ஊரில் எப்படி இருக்கு?

நிலுவைத் தொகை உள்ளிட்ட பிரச்னைகளுக்காக அரசுடன் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் நடத்திய 7 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, இன்றிருந்து (மே 15) துவங்குவதாக அறிவித்திருந்த பஸ் ஸ்டிரைக்கை போக்குவரத்து ஊழியர்கள் நேற்று (மே 14) பிற்பகல் முதலே துவங்கினர். இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவரம் :

* சென்னையில் குறைவான பஸ்களே இயக்கம்; பயணிகள் அவதி

* தஞ்சாவூரில் அரசு பஸ்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை

* புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், திருச்சியில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

* சிவகங்கை - காரைக்குடியில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை

* மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீதம் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

* தேனியில் 70 சதவீத பஸ்கள் இயக்கவில்லை

* ராமநாதபுரம்: 360 பஸ்களில் 11 பஸ்கள் மட்டுமே இயக்கம்

* குன்னூரில் 66 பஸ்களில் ஒரு பஸ் மட்டுமே இயக்கம்

* பெரம்பலூரில் 110 பஸ்களில் ஒரு பஸ் கூட இயக்கப்படவில்லை

* பொள்ளாச்சியில் 10 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம்

* ஈரோடு - சத்யமங்கலத்தில் 10 சதவீதம் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.