Feb 03

அசத்தல் அம்சங்களுடன் அதிரடியாய் உருவாகும் ரெட்மி நோட் 5

ஸ்மார்ட்போன் சந்தையில் அசுர வளர்ச்சியை பதிவு செய்து வரும் சியோமி விரைவில் தனது ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகி வரும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளியாக இருக்கும் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சார்ந்த எதிர்பார்ப்பு சியோமி ப்ரியர்கள் மத்தி்யில் எழுந்துள்ளது. முந்தைய ஸ்மார்ட்போனை மிஞ்சும் சிறப்பம்சங்கள் ரெட்மி நோட் 5 வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் பெசல் லெஸ் டிஸ்ப்ளே, டூயல் கேமரா செட்டப் நிச்சயம் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 18:9 ரக டிஸ்ப்ளே, மிக மெல்லிய பெசல்கள், செங்குத்தான டூயல் கேமரா அமைப்பு, கேமராவின் கீழ் எல்இடி பிளாஷ் மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களில் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் இருவித மெமரிக்களில் வெளியிடப்படலாம் என கூறப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.99 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 3 ஜிபி அல்லது 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவிக் சார்ஜ் 4.0 உள்ளிட்ட அம்சங்களுடன் கிரெ, கோல்டு மற்றும் புளூ நிறங்களில் வெளியிடப்படலாம் என்றும் இதன் விலை CNY 1,499 (இந்திய மதிப்பில் ரூ.15,300) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.