Feb 03

மீண்டும் முதலிடம்: ரிலையன்ஸ் ஜியோ அசத்தல்

இண்டர்நெட் டேட்டா சேவையை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ 11-வது மாதமும் தொடர்ச்சியாக முதலிடம் பிடித்துள்ளது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி நவம்பர் 2017-இல் அதிகபட்சமாக நொடிக்கு 25.6 எம்.பி. (mbps) வேகத்தில் ஜியோ டவுன்லோடு வேகம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவுக்கு அடுத்த இடத்தில் வோடபோன் நொடிக்கு 10 எம்பி வேகத்தில் இரண்டாவது இடத்திலும், பாரதி ஏர்டெல் நொடிக்கு 9.8 எம்.பி. மற்றும் ஐடியா செல்லுலார் நொடிக்கு 7 எம்.பி. வேகத்தில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அக்டோபர் மாத நிலவரப்படி ஜியோ வேகம் நொடிக்கு 21.8 எம்.பி.-யாக இருந்தது.  

டேட்டா டவுன்லோடு வேகம் மைஸ்பீடு (MySpeed) எனும் செயலி கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த செயலி வழங்கும் தகவல்களை சேகரித்து மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடுகிறது. அப்லோடு வேகத்தை பொருத்த வரை வோடபோன் நிறுவனம் ஐடியா செல்லுலாரை பின்னுக்கு தள்ளி நொடிக்கு 6.9 எம்.பி. வேகத்தை பதிவு செய்திருக்கிறது. ஐடியா செல்லுலார் நொடிக்கு 6.6 எம்.பி. வேகமும், ரிலையன்ஸ் ஜியோ நொடிக்கு 4.9 எம்.பி. மற்றும் ஏர்டெல் நொடிக்கு 4.0 எம்.பி. வழங்கியுள்ளன. 

அக்டோபர் மாத நிலவரப்படி ஐடியா நிறுவனம் நொடிக்கு 7.1 எம்.பி. வழங்கி் அப்லோடு செய்ய அதிவேக டேட்டா வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது.