Feb 03

பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பிரிட்டிஷ் கொலம்பியாவை அதிர்ச்சியடைய செய்த காட்டுத்தீக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த பிராந்தியத்திற்கு அருகே உள்ள தொடரூந்து போக்குவரத்து மற்றும் பராமரிப்பு பணிகளால் இந்த தீப்பரவல் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள பொலிஸார், இதற்கு மனிதர்களே காரணமாக இருக்க கூடுமென சந்தேகிக்கின்றனர்.

ஆகையால் இதனை கண்டறிய பொதுமக்களின் தகவல்கள் தேவைப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களை தொடர்புக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் திகதி பரவத் தொடங்கி ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரையிலும் 2,000 ஏக்கர் வரையிலான காட்டுப் பகுதியை எரித்து சாம்பலாக்கிய காட்டுத்தீ, பிரிட்டிஷ் கொலம்பியாவில் குறித்த பருவகாலத்தில் இதுவரை ஏற்பட்ட காட்டுத்தீச் சம்பவங்களில் மிகப் பெரிய காட்டுத்தீச் சம்பவம் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த தீ பரவல் காரணமாக சுமார் 50,000 பேர் வரையில் இடம்பெயர்ந்ததுடன், இதன்போது 211 வீடுகள் மற்றும் கட்டடங்கள் தீக்கிரையாகியதாக தெரிவித்துள்ளனர்.