Feb 02

முழுமையான குடியரசு நாடுகளின் பட்டியலில் கனடா: அமெரிக்காவுக்கு இடமில்லை

உலகின் 19 முழுமையான குடியரசு நாடுகளின் பட்டியலில் கனடா இடம்பெற்றுள்ளது.Economist Intelligence Unitஇன் Democracy Index of 2017 தர வரிசைப்பட்டியலில் கனடா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தேர்தல் முறை, சமத்துவம் அல்லது பல் கலாச்சார அங்கீகாரம், சிவில் சுதந்திரங்கள், அரசு செயல்படும் விதம் மற்றும் அரசியல் கலாச்சாரம் என்னும் ஐந்து அளவீடுகளின் அடிப்படையில் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதில் கனடா 10க்கு 9.15 மதிப்பெண்கள் பெற்று உலகின் முழுமைக் குடியரசு நாடுகளில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.2016இலும் கனடா இதே மதிப்பெண்களைப் பெற்றது.முதல் மூன்று இடங்களை முறையே Norway, Iceland மற்றும் Sweden ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

உலகின் மக்கள் தொகையில் 4.5% பேர் மட்டுமே முழுமையான குடியரசு நாடுகளில் வாழ்கிறார்கள்.44.3 % பேர் ”ஜனநாயகப் பற்றாக்குறை” உள்ள நாடுகளில் வசிக்கிறார்கள், இதில் United States, Japan, India மற்றும் Colombia, ஆகிய நாடுகள் அடக்கம்.மீதமுள்ள மக்கள் ஒரு கலப்பு அல்லது சர்வாதிகார ஆட்சியின்கீழ் வாழ்கிறார்கள்.

இதில் China, Qatar மற்றும் Russia ஆகிய நாடுகள் அடக்கம்.இந்தத் தரவரிசைப் பட்டியலில் வட கொரியா கடைசி இடங்களில் ஒன்றில் உள்ளது.2016இல் சர்வாதிகார ஆட்சியிலிருந்த Gambia தற்போது கலப்பு ஆட்சிக்கு உயர்ந்துள்ளது.

தேர்தல் முறை மற்றும் அரசு செயல்படும் விதம் ஆகியவற்றில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கனடா இன்னும் அரசியல் பங்களிப்பில் முன்னேற வேண்டியுள்ளது.ஆனால் சிவில் சுதந்திரங்களைப் பொருத்தவரை கனடா 10க்கு 10 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது மட்டுமின்றி பாராட்டப்படத்தக்கது.