Feb 02

இயற்கை பேரழிவு! - 44 நகராட்சிகளை தேர்ந்தெடுத்த அரசு!

இயற்கை சீற்றங்களுக்கு ஆளான பகுதிகளாக 44 நகராட்சிகளை உத்தியோகபூர்வமாக தேர்ந்தெடுத்துள்ளது. நேற்று வியாழக்கிழமை உள்துறை அமைசகம் வெளியிட்ட தகவல்களில் இது தெரியவந்துள்ளது.

கடந்த மாதங்களில் பிரான்ஸ் முழுவதும் பெரும் மழை, வெள்ளம், இரு பிரதான புயல்கள், பனிச்சரிவு, கடும்பனிப்பொழிவு என பல்வேறு இயற்கை பேரழிவுகளை சந்தித்தது. முக்கியமாக Eleanor மற்றும் Berguitta புயல்கள் பெரிதும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை 1 ஆம் திகதி, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், '44 நகராட்சிகளை இயற்கை சீற்றத்துக்கு உள்ளான நகராட்சிகளாக அரசு தேர்ந்தெடுத்துள்ளது' என குறிப்பிட்டுள்ளது. தவிர மேலும் 21 நகராட்சிகள் ஆய்வில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அவை தவிர, மேலதிகமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன எனவும், பெப்ரவரி நடுப்பகுதிக்குள் முழுமையான தகவல்கள் திரட்டப்படும் எனவும், விரைவில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கள் குறித்தும் சேத கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.