May 14

ஈரானை உலுக்கிய 5.7 ரிச்டர் பூமியதிர்ச்சி

 ஈரானின்  துர்க்மெனிஸ்தான்  பிராந்தியத்துக்கு அருகில்  சனிக்கிழமை மாலை  தாக்கிய 5.7  ரிச்டர் பூமியதிர்ச்சியில் சிக்கி  குறைந்தது இருவர் பலியானதுடன்  பலர் காயமடைந்துள்ளனர்.

வட கொராஸன் மாகாணத்தில் பொஜ்னுர்ட்  நகருக்கு அருகில் தாக்கிய இந்தப் பூமியதிர்ச்சியில் சிக்கி 54  வயது பெண்ணொருவரும் சிறுமியொருவருமே உயிரிழந்துள்ளனர்.

துர்க்மெனிஸ்தான் எல்லையிலிருந்து 50  கிலோமீற்றர் தொலைவில் 12.5  கிலோமீற்றர் ஆழத்தில் இந்தப் பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது.

அத்துடன் மேற்படி பிராந்தியத்திலுள்ள கட்டடங்கள் பல சேதமடைந்தும் அழிவடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.