May 14

துருக்கியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து;23 பேர் உயிரிழப்பு

தென் துருக்கியில் கடற்கரையோர வாசஸ்தலமான மார்மரிஸில்  சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 23  பேர் உயிரிழந்துள்ளதுடன் 11  பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பலியானவர்களில் அநேகர் பெண்களும் சிறுவர்களுமாவர்..

  அந்த பஸ்ஸில் பயணித்தவர்களில் வெளிநாட்டு  சுற்றுலாப் பயணிகள் எவரும் உள்ளடங்கவில்லை  எனத் தெரிவிக்கப்படுகிறது.

  அந்த பஸ்ஸில் மார்மரிஸ் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அன்னையர் தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக  உள்ளூர் சுற்றுலா பயணிகள் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

 பஸ்ஸின் வேகத் தடுப்பு செயலிழந்தமையே இந்த அனர்த்தத்துக்கு காரணம் என நம்புவதாக முக்லா பிராந்திய ஆளுநர் அம்றிக் சிசெக் கூறினார்.

அதேசமயம் சாரதியின் தவறே இந்த விபத்துக்கு காரணம் என நம்புவதாக மார்மரிஸ் நகர மேயர் அலி அகார்  தெரிவித்தார்.

 இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.