Feb 01

பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க - இல்-து-பிரான்சின் பிராந்திய ஆலோசகர்களுக்கு பயிற்சி!

பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கு இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் உள்ள அனைத்து பிராந்திய ஆலோசகர்கள் அனைவருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்-து-பிரான்சுக்குள் கடந்த இரு வருடங்களில் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் வழக்குகள் பதிவானதைத் தொடர்ந்து, மாகாணத்தின் முதல்வர்  இந்த முடிவினை எடுத்துள்ளார்.

அனைத்து பிராந்திய ஆலோசகர்களும் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து கட்டாய பயிற்சி வகுப்புக்களில் கலந்துகொண்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் துறையில் இருக்கும் நபர்கள் மீது கடந்த 2016"2016ஆம் ஆண்டு, மற்றும் 2017 ஆம் ஆண்டில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

குறிப்பாக  ஆம் ஆண்டு பிராந்திய ஆலோசகர்கள் இந்த பாலியல் துன்றுத்தல் வழக்கில் சிக்கியிருந்தனர். அதைத்தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டிலும் இது தொடர்கிறது. இவை அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவந்து, 'முன் மாதிரியான மாகாண'மாக இல்-து-பிரான்சை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.