Jan 31

மொன்றியல் பாடசாலைசேவை பேருந்து சாரதிகள் வேலைநிறுத்தம்

மொன்றியல் பாடசாலைசேவை பேருந்து சாரதிகள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்காரணமாக மாற்றுவழி போக்குவரத்துக்காக மொன்றியல் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சுமார் 330 பாடசாலை பேருந்து சாரதிகள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.

வருடம் தோறும் இரண்டு சதவீத ஊதிய அதிகரிப்பைகோரி மூன்று வருட ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதற்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பாக தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் முதலாளி வர்க்கத்தினருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இவ்வாறு வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.