May 14

மொன்றியல் நகருக்கு பராக் ஒபாமா விஜயம் செய்ய உள்ளார்

அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எதிர்வரும் யூன் மாதம் கனடாவின் மொன்றியல் நகருக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொன்றியில் நகரத்தில் நடைபெறவுள்ள வர்த்தகர் சபை மாநாடில் கலந்து கொள்ளும் நோக்குடன் குறித்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக ஏற்பட்டுக்குழு அறிவித்துள்ளது.

குறித்த மாநாடு எதிர்வரும் யூன் மாதம் ஆறாம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது, அவர் முக்கிய உரையினை நிகழ்த்த உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மாநாட்டில் பல்வேறு நிகழ்வுகளுக்கும் முத்தாய்ப்பாக அமெரிக்க முனனாள் அதிபர் ஒபாமாவின் இந்த உரை இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவின் மொன்றியல் நகரம் 375ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடிவரும் நிலையில், பராக் ஒபாமாவின் குறித்த விஜயம் தொடர்பில் தாம் மிகவும் பெருமைப்படுவதாக மொன்றியல் வர்த்தகர் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.