Jan 31

பிரித்தானியாவில் விமர்சையாக இடம்பெற்ற தமிழர் மரபுத்திங்கள் பெருவிழா !

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 2018ம் ஆண்டிற்கான தமிழர் மரபுத் திருநாள் மிக விமர்சையாக நடைபெற்றது.

பொதுப் பொங்கலிடல், தமிழர்களின் தொன்மத்தை வெளிப்படுத்தும் கலை பண்பாட்டு நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இப்பெருவிழாவினை அலங்கரித்திருந்தன.

 மங்கள விளக்கினை முன்னாள் போராளி அமலதாஸ், ஈழத்துக் களைஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் சகோதரர் விமலரட்ணம் ஆகியோர் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பிரித்தானிக் கொடியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவி நிதி அமைச்சர் தேவராஜா நீதிராஜா அவர்களும் தமிழீழ தேசியக் கொடியினை முன்னாள் போராளி சுதாகரன் அவர்களும் தேசிய கீதம் இசைக்கப்பட ஏற்றி வைத்தனர். 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதிப்பிற்குரிய பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் அவர்களின் வாழ்த்துச் செய்தியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பாடல் அமைச்சின் பிரித்தானியாவிற்கான செயலர் ருத்திராபதி சேகர் அவர்கள் வழங்கினார்.

இதன் போது வருகை தந்திருந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான Croydon North laber party MP Hon Mr. Steve Reed, croydon laber party broad green secretary and Ethinic minority forum treasurer Hon MR. Rajagopal, Croydon North laber party secretary Hon Mrs. Jenet Campbell, Ethinic minority forum chairman Catherin Wilson, Mr. David Thayaparan Solicitor and secretary of Croydon Tamil community organisationஆகியோருக்கு தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பான ஆவனங்களை தாங்கிய பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் எழுதிய SRILANKA: HIDING THE ELEPHANT எனும் நூலும் வழங்கப்பட்டது.

அப்பாவித் தமிழ்மக்களுக்கு நடந்த இனப்படுகொலையின் மிக முக்கிய நிகழ்வான 1958ம் ஆண்டு கோயில் பூசகர் உயிருடன் எரிக்கப்பட்டதும் சிறு குழந்தைகளை கொதிக்கும் தாரில் போட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நேரடி சாட்சியமான அந்த பூசகருடைய சகோதரி ராஜலக்ஷ்மி பாலசுப்பிரமணியம் ஐயர் அவர்கள் இவ் விழாவில் பங்குகொண்டு இருந்ததுடன் HIDING THE ELEPHANT எனும் நூலினை பெற்றுக்கொண்டார்.

சிவகுமாரன் தமிழ் பாடசாலை மாணவிகள் மற்றும் நடராஜா நர்த்தன கலாலயா மாணவர்கள் ஆகியோரின் நடனங்கள், தமிழீழ எழுச்சிப்பாடல்கள், எழுச்சி நடனங்கள், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. இதன் போது நீதிக்கான நிதிவழங்கல் எனும் அதிட்டலாப சீட்டிழுப்பில் அதிட்டம் பார்க்கப்பட்டு அதிட்டசாலிகளாக தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களின் விபரங்கள் :

முதற் பரிசான 10 பவுண் தங்கத்தினை பெற்றுக் கொண்ட வெற்றியாளர்

51358

மேலும் 10 பேருக்கான ஒரு பவுண் தங்கத்தினை பெற்றுக் கொண்ட வெற்றியாளர்கள்

1வது வெற்றியாளர் : 

51489/

2வது வெற்றியாளர் : 

55231

3வது வெற்றியாளர் : 

51699

4வது வெற்றியாளர் : 

52430

5வது வெற்றியாளர் : 

52001

6வது வெற்றியாளர் : 

61729

7வது வெற்றியாளர் : 

51674

8வது வெற்றியாளர் : 

50698

9வது வெற்றியாளர் : 

56021

10வது வெற்றியாளர் : 

52830


இதற்கு மேலதிகமாக 4ஆறுதல் பரிசுகளை பெற்றுக் கொண்ட வெற்றியாளர்கள் : 

1வது வெற்றியாளர் : 

55466

2வது வெற்றியாளர் : 

54081

3வது வெற்றியாளர் : 

50435

4வது வெற்றியாளர் : 

58794


மேலே குறிப்பிட்ட வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர் அதிட்டலாப சீட்டிழுப்பு தொடர்பான விபரங்களுக்கு :

நீதிராஜா (TGTE MP) 

‭07577 996966‬

மயூரன்

‭07504 345987‬

தீபன்

07459 364354

அலுவலகம்

020 7193 6655

தொடர்ந்து நன்றியுரையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவி நிதி அமைச்சர் நீதிராஜா அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வின் நிறைவாக கொடி கையேந்தல் இடம்பெற்று உறுதி மொழி ஏற்புடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.  நிகழ்வினை ஷாமினி ராஜநாதன், டினுஷன் ஜெயராம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பொங்கல் விழா நிகழ்வு 2015ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.