Mar 09

ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் குதிக்கிறார் தீபா

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதால் வெற்றிடமாகியுள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 23-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு ஒரு நாள் மட்டுமே அவகாசம் தரப்பட்டுள்ளது. மறுநாள், அதாவது மார்ச் 24-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.

மனுக்களை வாபஸ் பெற மார்ச் 27-ம் தேதி கடைசி நாள். ஏப்ரல் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.கே. நகரில் போட்டியிடுவது குறித்து இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா கூறியதாவது: -

விரட்டியடிக்கப்பட்ட சதிகார கும்பலை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஆர்.கே.நகர் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குகவார்கள். எனது ஆதரவாளர்களை என்றுமே நான் புறக்கணிக்க மாட்டேன் என்று கூறினார்.