Jan 30

வாக்களிப்பில் இருந்து விலகி வாக்காளர் தவறு இழைத்து விடக்கூடாது!!

சோமா­லிய நாட்­டில் தேர்­தல் நடத்தத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. கட­னாக கைமாற்­றாக இந்­தி­யா­வில் இருந்து ‘வோட்­டர் இயந்­தி­ரத்தை’ (Voter machine) வாங்கி கணினி முறை­யில் இல­கு­வாக வாக்­குப்­ப­திவு செய்­ய­வும் வாக்­கு­களை எண்­ண­வும், அதிக செல­வில்­லா­மல் தேர்­தலை நடத்­த­வும் சோமா­லிய நாட்டு அரசு ஏக­ம­ன­தாக முடிவு செய்­தது.

வாக்­குப் பதிவு குறிப்­பிட்ட தினத்­தில் நடை­பெற்­றது. தேர்­தல் முடிவு அறி­விக்கப்பட்­ட­தும் சாரி­ சா­ரி­யாக மக்­கள் மயங்கி விழுந்­தார்­கள்! ஏனெ­னில் அனைத்து இடங்­க­ளி­லும் பார­திய ஜன­தாக் கட்சி அமோக வெற்றி பெற்­றி­ருந்­தது!

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பின் 

கூட்டு அவ­சி­ய­மா­னது

தமிழ் அர­சுக் கட்சி, ஈபி­ஆர்­எல்­எப், ரெலோ, புளொட், (தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யும் இருந்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கின்­றது) ஆகிய நான்கு கட்­சி­கள் சேர்ந்த ஒரு கூட்டே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பாக இருந்­தது. 

இந்­தக் கட்­சி­கள் நான்­கும் தத்­த­மது கொள்­கை­க­ளோடு, தமி­ழர்­க­ளின் விடு­த­லைக்­காக வெவ்­வேறு வடி­வங்­க­ளில் போராடி வந்­தி­ருக்­கின்­றன. அது மட்­டு­மல்­லாது இந்­தக் கட்­சி­கள் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பாக மாறு­வ­தற்கு முன்பு வெவ்­வேறு கால­கட்­டங்­க­ளில் தனித்­த­னியே தேர்­தல்­க­ளில் போட்­டி­யிட்­டன என்­ப­தும் வர­லாறு.

இந்­தக் கட்­சி­கள் நான்­கும் சேர்ந்து ஒன்­றாக இணைந்­தது மட்­டு­மல்­லாது, அர­சி­ய­லில் பங்­கேற்­பது, தேர்­த­லில் நிற்­பது போன்­ற­வற்­றி­லும் கூட்­டாக இயங்­கி­யமை தமிழ் மக்­கள் மத்­தி­யில் மட்­டு­மல்ல, தேசிய, பன்னாட்டு ரீதி­யில் ஒரு பெரிய அர­சி­யல் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த விட­ய­மாக கரு­தப்­பட்­டது; இந்­தக் கட்­சி­கள் ஒன்­றாய் நின்­ற­த­னால், ஒன்­றில் ஒன்று தங்­கி­யி­ருந்­த­தி­னால் இது­வரை கால­மும் இந்­தக் கட்­சி­க­ளின் ஆயுள் ஒரு வகை­யில் உயி­ரோட்­டத்­தோடு நீடித்­தது என­லாம்.

உடைவை ஒட்­டாது விட்­டால் 

நலன் கிட்­டாது!

ஆனால், தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பில் உள்ள கட்­சி­க­ளுள் ஒன்­றான தமி­ழ் அரசுக் கட்­சி­யின் தன்­னிச்­சை­யான செயற்­பா­டு­க­ளும், தன்­னிச்­சை­யான போக்­கு­க­ளும் ஏனைய மூன்று பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்கு மட்­டு­மல்­லாது ஏனைய தமிழ்க் கட்­சி­க­ளுக்­கும் பொது அமைப்­பு­க­ளுக்­கும் அவ்­வப்­போது அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி வந்­தது.

இதன் கார­ண­மாக கீரைக்­க­டைக்­கும் எதிர்க்­கடை வேண்­டும் என்­ப­து­போல ஒரு மாற்­றணி தேவை என்ற கருத்து பல தரப்­பா­ரி­டத்­தில் சில ஆண்­டு­க­ளாக நிலவி வந்­தது.

இந்த நிலை வலுப்­பெற்­ற­தன் கார­ண­மா­க­வும், தமி­ழ் அரசுக் கட்­சி­யு­டன் ஏற்­பட்ட முரண்­பாடு கார­ண­மா­க­வும்(வேறு­வேறு கார­ணங்­க­ளும் இருக்­கக்­கூ­டும்!) ஈபி­ஆர்­எல்­எவ் அணி­யின் செய­லா­ளர் நாய­கம் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ர­னும், தமிழ் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் பொன்­னம்­ப­லம் கஜேந்­தி­ரக்­கு­மா­ரும் சேர்ந்து தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு ஈடான மாற்­ற­ணி­யாக ஒரு கூட்­ட­மைப்பை உரு­வாக்க எண்­ணி­னார்­கள்.

ஆனால் இவர்­க­ளின் கூட்­டணி இரு­பத்­தொரு நாள்­களே நீடித்­தது! இந்த நிலை­யில் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் தலை­மை­யி­லான ஈ.பி. ஆர்.எல்.எப்., தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி மற்­றும் சில கட்­சி­க­ளு­டன் கூட்­டுச் சேர்ந்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­ணி­யாக எதிர்­வ­ரும் உள்­ளு­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­கின்­றது.

தமிழ் காங்­கி­ர­ஸின் தலை­வர் பொன்­னம்­ப­லம் கஜேந்­தி­ரக்­கு­மார் தலை­மை­யி­லான தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி தமிழ்த் தேசிய பேர­வை­யின் பெய­ரில் துவிச்­சக்­க­ர­வண்­டிச் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­கின்­றது.

இருக்­கை­க­ளைப் பார்க்க, 

கொள்­கை­க­ளைப் பாருங்­கள்!

புளொட் அணி­யின் தலை­வர் த.சித்­தார்த்­தன், தமி­ழ் அரசுக் கட்­சி­யு­ட­னான அதி­ருப்­தி­யில் தேர்­த­லைக் கார­ண­மாக வைத்­து­கொண்டு தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பில் இருந்து வில­கா­மல் ‘தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு ஒன்­றாக இருக்­க­வேண்­டும் என்ற கொள்­கைக்­கா­க­வே­னும் தேர்­த­லில் இருந்து விலகி தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பு­டன் இருப்­போம்’ எனத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் அதி­ருப்­திப்­பட்ட ஒரு சூழ­லில் கூறி­யி­ ருக்­கின்­றார்.

மக்­க­ளின் நல­னை­யும் நீண்­ட­கால அர­சி­யல் பய­ணத்­தை­யும் முன்­வைத்து சிந்­திப்­ப­வர்­கள் இவ்­வா­று­தான் சிந்­திக்­க­வேண்­டும்! முரண்­பா­டு­கள், சிக்­கல்­கள் ஏற்­ப­ட­லாம், எனி­னும் இவ்­வா­றான நேரங்­க­ளில்­தான் விவே­க­மான தீர்­மா­னங்­களை மேற்­கொண்டு புத்­திக்­கூர்­மை­யான செயற்­பா­டு­க­ளைச் செய்ய முன்­வ­ர­வேண்­டும்.

தமிழ் மக்­கள் பேர­வையை ‘வில்­லன்’­

போன்று பார்க்­க­வேண்­டி­ய­தில்லை!

தமிழ் மக்­கள் பேரவை தமி­ழர்­க­ளின் அர­சி­யல் நிலைப்­பா­டு­க­ளில்; கவ­னம் செலுத்தி வரு­கின்ற நிலை­யில், தேர்­தல்­க­ளில் நிற்­ப­தில்லை என்ற நிலைப்­பாட்­டு­டன் தொடர்ந்து பய­ணிக்­கின்­றது. எனி­னும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரின் போக்­கு­க­ளும், இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு குறித்த தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரின் செயற்­பா­டு­க­ளி­லும் திருப்­தி­ய­ளிக்­காத நிலை­யில் மக்­க­ளின் பல­த­ரப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளை­யும் உள்­வாங்கி இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வுத் திட்­டத்­தைத் தெளி­வாக முன்­வைத்­துள்­ளார்­கள் தமிழ் மக்­கள் பேர­வை­யி­னர். மிக முக்­கி­ய­மான, காத்­தி­ர­மான ஒரு பெரும் செய­லைத் செய்து முடித்­தி­ருக்­கின்­றார்­கள் தமிழ் மக்­கள் பேர­வை­யி­னர்.

தமிழ் மக்­கள் பேரவை ஒரு சிந்­தனை வட்­டம்(think-tank)ஆக இயங்­கு­வது மிகப் பொருத்­த­மா­ன­தும் காலத்­தின் தேவை­யான ஒரு செயற்­பா­டா­கும் எனக் கொள்­ள­லாம். அவ்­வா­றாக மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் சேர்ந்து சிந்­திப்­பது அர­சி­யல்­வா­தி­கள் தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­ப­டா­மல் இருக்க வழி­வ­குப்­ப­தோடு மக்­க­ளின் அர­சி­யல் பிர­தி­நி­தி­க­ளுக்கு நல்­லா­லோ­ச­னை­களை வழங்­க­வும் முடி­யும். ஆயி­னும் தமிழ் மக்­கள் பேர­வை­யின் வரவை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முழு விருப்­போடு ஏற்­ற­தா­கத் தக­வல்­கள் இல்லை,

முரண்­பா­டு­க­ளைக் களைய முற்­பட்­டி­ருக்­க ­வேண்­டும் 

முத­ல­மைச்­சர்!

வட­மா­காண முத­ல­மைச்­சர் சீ.வி.விக்­னேஸ்­வ­ரன் இன்­றைய சூழ­லில் கட்­சி­க­ளைப் பார்க்­கா­மல் ஊழ­லற்ற, நேர்­மை­யா­ன­வர்­க­ளைத் உள்ளூராட்சி மன்­றத் தேர்­த­லில் தெரி­யும்­படி கேட்­டி­ருக்­கின்­றார். முத­ல­மைச்­ச­ருக்­கும் தமிழ்த் தேசிய கூட்­ட­ மைப்­பின் அங்­கம் வகிக்­கும் தமி­ழ் அரசுக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடை­யி­லான உறவு சுமூ­க­மாக இல்லை என்­பது யாவ­ரும் அறிந்த விட­யம்.

நீதி­ய­ர­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­ச­ராக்­கி­யது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் அனைத்­துக் கட்­சி­க­ளும்­தான் என்­றா­லும் அதில் அங்­கம் வகிக்­கும் தமி­ழ­ர­சுக் கட்­சியே முக்­கிய வகி­பா­கம் வகித்­தது என்றே சொல்­லப்­ப­டு­கின்­றது. அவ்­வாறே தமி­ழ் அரசுக் கட்­சி­தான் நீதி­ய­ர­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­ச­ராக நிறுத்­து­வ­தில் முன்­னிலை வகிப்­ப­தாக வைத்­துக்­கொண்­டா­லும் அக்­கா­ர­ணத்­திற்­காக தமி­­ழ் அரசுக் கட்­சி­யின் தாளத்­திற்­குத்­தான் அவர் ஆட­வேண்­டும் என்ற அவ­சி­யம் கிடை­யாது!

அதே­வேளை மக்­க­ளின் ஆணையை மீறி முத­ல­மைச்­சரோ அல்­லது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்போ அல்­லது கூட்­ட­மைப்­பைச் சார்ந்த ஏனைய கட்­சி­களோ செயற்­ப­ட­வும் கூடாது.

ஆக, ‘பூனைக்கு மணி­கட்­டு­வது யார்?’ என்ற பிரச்­சி­னை­தான் அடிப்­ப­டை­யில் பெரும் பிரச்­சி­னை­யாக எழுந்து நிற்­கின்­றது. ஆனால் இரு­சா­ரா­ரும் பக்­கம்­பக்­க­மாக பத்­தி­ரி­கை­க­ளுக்­குப் பதில் எழு­து­வ­தி­லும் விளக்­கம் அளிப்­ப­தி­லும் காலத்­தை­யும் சக்­தி­யை­யும் செல­வ­ழித்­துக்­கொண்டு இருக்­கின்­றார்­கள். இவர்­க­ளின் ‘தண்­ட­வா­ளப் போக்­கு­கள்’ சாதா­ரண மக்­கள் மத்­தி­யில் குழப்­பத்தை உண்­டு­பண்ணி இருக்­கின்­றது என்­ப­தனை எவ­ரா­லும் மறுக்க முடி­யாது.

அடிப்­ப­டை­களை ஈடு­வைக்­காது அர­சி­யல் வலு­வைப் பயன்­ப­டுத்­த­வேண்­டும்!

பிள­வுண்டு போவ­தால் ஒரு பய­னும் கிடைக்­கப் போவ­தில்லை என்­பதை தமிழ்த் தலை­வர்­கள் உணர்ந்து கொள்ள வேண்­டும். அத்­து­டன் பிரி­வு­கள் மேலும் மேலும் பிரி­வி­னை­க­ளைத்­தான் உரு­வாக்­கும். முப்­பது ஆண்­டு­கா­லம் மாபெ­ரும் ஆயு­தப் போராட்­டத்தை நடத்தி அதன் ஊடா­கப் பெற்­றி­ருக்க வேண்­டிய உரி­மை­களை இழந்த நிலை­யில் மேலும் நாம் கட்சி கட்­சி­யா­கப் பிரிந்து நின்­று­கொண்டு நாம் விரும்­பும் அர­சி­யல் அபி­லா­சை­களை அடை­ய­மு­டி­யாது என்ற யதார்த்­தத்­தை­யும் சிந்­தித்­துப் பார்க்­க­வேண்­டும்.

எனவே, அடிப்­படை அம்­சங்­களை ஈடு­வைக்­காது அர­சி­யல் வலு­வைப் பயன்­ப­டுத்தி கூடு­த­லான அதி­கா­ரப் பகிர்­வைப் பெறு­வதே இக்­கா­லத்­தில் யதார்த்­த­பூர்­வ­மா­ன­தும் புத்­தி­சா­லித்­த­ன­மா­ன­தும் ஆகும்.

இடைக்­கால அறிக்கை  குறித்த குழப்­பம்

இடைக்­கால அறிக்கை குறித்து எதி­ரும் புதி­ரு­மான கருத்தை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பும், முத­ல­மைச்­சர் தலை­மை­யி­லான அல்­லது முத­ல­மைச்­சர் சார்­பான குழு­வும் முன்­வைத்து வரு­கின்­றார்­கள். இவ்­வாறு இவர்­கள் இரண்டு பட்­டுக் கிடக்­கை­யில் எவ­ரு­டைய கருத்தை ஏற்­றுக்­கொள்­வது என்று தமிழ் மக்­கள் விழி­பி­துங்கி நிற்­கின்­றார்­கள் என்­பது மட்­டும் அப்­பட்­ட­மான உண்மை! இந்­நே­ரத்­தில்­தான் உள்­ளு­ராட்சி மன்­றத் தேர்­த­லும் வந்து சேர்ந்­தி­ருக்­கின்­றது.

விச­மத்­த­ன­மான பரப்­புரை!

இதற்­கி­டை­யில் 2015இல் அரச தலை­வர் தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்த மகிந்த ராஜ­பக்ச 2018இல் நடை­பெற இருக்­கும் உள்­ளு­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­த­லில் பொது­மக்­கள் முன்­னணி என்ற கட்­சி­யின் பெய­ரில் தேர்­த­லில் குதித்து விச­மத்­த­ன­மான தேர்­தல் பரப்­பு­ரை­யில் இறங்­கி­யுள்­ளார். ‘நாட்­டைத் துண்­டா­டு­கின்­றார்­கள்!

தமி­ழி­ழம் அமைத்­துக் கொடுக்­கின்­றார்­கள்!’ என்­றெல்­லாம் இப்­போது கூறித் திரி­கின்­றார். சிறு­பான்­மை­யின மக்­க­ளான தமிழ், முஸ்­லிம் மக்­க­ளின் பெரும்­பான்­மைப் பலத்தை தவற விட்­டு­விட்டு, இப்­போது பெரும்­பான்­மை­யின மக்­க­ளாக விளங்­கும் சிங்­கள மக்­க­ளின் உணர்­வு­களை மீண்­டும் உசுப்­பி­விட்டு அதில் உச்­சப் பலன் அடைய முனை­கி­றார் மகிந்த.

வடக்­கில் 726 ஆச­னங்­க­ளுக்கு 

6,744 பேர் போட்டி!

வட மாகா­ணத்­தி­லுள்ள உள்­ளு­ராட்சி சபை­க­ளுக்கு 726 உறுப்­பி­னர்­க­ளைத் தெரி­வ­தற்கு 6,744 பேர் போட்­டி­யி­டு­வ­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன! இவர்­கள் 19 அர­சி­யல் கட்­சி­க­ளை­யும் 19 சுயேட்­சைக் குழுக்­க ­ளின் சார்­பி­லும் போட்­டி­யி­டு­கின்­றார்­கள். பார்க்­கின்­ற­போது ‘கின்­னஸ்’ தேர்­தல் சாத­னை­யா­கப் பதி­யப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் தென்­ப­டு­வ­தா­கவே தெரி­கின்­றது.

குற்­ற­வா­ளி­களை நிரா­க­ரிக்க 

வேண்­டும்!

நீதி­யா­ன­தும் நியா­ய­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்­கள் இயக்­க­மான கபே அமைப்பு நீதி­மன்­றி­னால் குற்­ற­வா­ளி­க­ளாக தண்­ட­னை­பெற்ற அறு­ப­துக்­கும் மேற்­பட்­ட­வர்­களை வேட்­பா­ளர்­க­ளாக முதன்மைக் கட்­சி­கள் நிறுத்­தி­யுள்­ளன என குற்­றம் சாட்­டி­யுள்­ளது. குற்­றஞ்­சாட்­டி­யது மட்­டு­மல்­லாது இவர்­க­ளின் பெயர்ப் பட்­டி­ய­லை­யும் பொலிஸ்மா அதி­ப­ரி­டம் கைய­ளித்­துள்­ளது.

குற்­ற­வா­ளி­களை மட்­டு­மல்ல சமூ­கத்­தோடு எவ்­வ­கை­யி­லும் தொடர்­பு­ப­டா­மல், சமூக வாழ்­வில் எவ்­வித ஈடு­பா­டும் காட்­டா­மல், அர­சி­ய­லில் ஈடு­பட்­டுக் கிடைக்­கிற சலு­கை­க­ளைப் பெறும் நோக்­கத்­தோடு தேர்­தல்­க­ளில் போட்­டி­யி­டும் பணச் செருக்­குக் கொண்ட வேட்­பா­ளர்­களை மக்­கள் அடி­யோடு நிரா­க­ரிக்க வேண்­டும். மேலும், மக்­கள் மத்­தி­யில் ஒற்­று­மையை, ஒன்­றிப்பை உரு­வாக்­கா­மல் குழப்­பங்­க­ளை­யும் பிரி­வி­னை­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தும் வேட்­பா­ளர்­களை மக்­கள் இனம்­கண்டு அவர்­கள் எக்­கட்­சி­யைச் சார்­த­வர்­க­ளாக இருப்­பி­னும் அவர்­களை அர­சி­யல் நீரோட்­டத்­தில் இருந்து அகற்­று­வது அர­சி­யல் இன்­னு­மின்­னும் அழுக்­க­டை­யா­மல் இருக்க வழி­செய்­யும்!

கிடைத்த பெரு­வெற்­றி­கள் 

இனி­யும் கிடைக்­குமா!

கூடி­யி­ருந்த அல்­லது கூடி­யி­ருந்­தி­ருக்க வேண்­டிய கட்­சி­கள் பிள­வு­பட்டு நிற்­கும் ஒரு சூழ­லி­லும் எந்தக் கட்­சியை ஆத­ரிப்­பது என்­ப­தும், எந்த நப­ருக்கு வாக்­க­ளிப்­பது என்­ப­தும் வட­கி­ழக்­குத் தமிழ் மக்­க­ளுக்கு குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­வது உண்மை.

இந்த நி­லை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­காத ஏனைய தமிழ்க் கட்­சி­கள் ஒன்­றா­கச் சேர்ந்­தி­ருந்­தால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் கடந்த காலங்­க­ளில் பெற்ற பெரும் வெற்­றி­க­ளைப்­போல் நடை­பெ­றப்­போ­கும் உள்­ளு­ராட்சி மன்­றத் தேர்­தல் அமை­யாது இருப்­ப­தற்­கான ஏது­நி­லை­கள் உரு­வா­கி­யி­ருக்­கும். ஏனெ­னில் வட்­டா­ரத் தேர்­தல் முறைமை என்­ப­தால் இந்த நிலை ஏற்­பட அதிக வாய்ப்­புண்டு.

ஆனால் தமிழ்க் தேசி­யக் கூட்­ட­மைப்­பைச் சாராத ஏனைய தமிழ்க் கட்­சி­கள் வெவ்­வேறு கூட்­டுக்­க­ளா­கப் பிரிந்து நிற்­ப­தால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இல­கு­வாக முன்­னிலை அடை­ய­வும் வாய்ப்­புண்டு. எதிர்­பார்க்­கப்­ப­டும் பெரும் வெற்றி கிடைக்­கா­து­போ­னால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் தம்மை ஒரு­த­டவை மீண்­டும் சீர்­தூக்­கிப் பார்க்க, சீர் செய்ய இத்­தேர்­தல் வழி­செய்­யும் என நம்­ப­லாம். மாறாக மிகப்­பெ­ரும் வெற்றி பெற்­றால் இத்­தேர்­தலே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மாகாண, நாடா­ளு­மன்ற இருக்­கை­க­ளுக்­கான அத்­தி­பா­ர­மா­கி­வி­டும்.

அர­சி­யலை விரும்­பா­தி­ருந்­தால் எம்மை விரும்­பா­த­வர்­கள் 

ஆள்­வார்­கள்!

இத்­த­கைய நிலை­யில், வாக்­க­ளிக்­காது இருந்­து­வி­டு­வோம்’ எனப் பலர் நினைக்­க­லாம். அப்­ப­டிச் செய்­வ­தால் தகு­தி­யற்­ற­வர்­கள் தலை­வர்­க­ளாக ஆகு­வ­தற்கு அது வழி­ச­மைத்­து­வி­டும். ஆத­லால் மக்­கள் தங்­கள் வாக்­கு­ரி­மை­யைச் சரி­யா­கப் பயன்­ப­டுத்தி தமது பிர­தி­நி­தி­ க­ளைத் தெரிந்­தெ­டுப்­பது மிக­மிக அவ­சி­ய­மா­னது ஆகும்.

இத­னைத்­தான் அறி­ஞர் பிளேற்றோ கூறு­கை­யில், ‘அர­சி­ய­லில் பங்­கேற்க நாம் விரும்­பாது இருந்­து­விட்­டால் நம்மை விரும்­பா­த­வர்­கள் எம்மை ஆள­வேண்­டிய நிலை ஆகி­வி­டும்!’ என்­கி­றார். ஆகவே, வாக்­க­ளிப்­பது ஒன்றே வாக்­கா­ளர்­க­ளின் தெரி­வா­கும் என்­பதை மக்­கள் கட்­டா­ய­மாக மன­தில் இருத்­திக் கொள்ள வேண்­டும்.

எவ்­வாறு தெரிவு செய்­வது!

இனி­மே­லும் பகை­மை­க­ளை­யும் குரோ­தங்­க­ளை­யும் ஏற்­ப­டுத்த நினைப்­ப­வர்­க­ளை­யும், கவி­ஞர் மாலி­னி­யின் ‘நிழ­லும் நிஜ­மும்’ என்ற கவிதை நூலில் கூறு­வ­து­போல, ‘பாலை­வ­னத்­தில் பயி­ரிட்டு விளச்­சல் அள்­ளித் தரு­வோம், கடலே இல்­லாத ஊருக்­குக் கப்­பல் கட்­டித் தரு­வோம்’ எனச் சாத்­தி­ய­மற்ற, சம்­பந்­தமே இல்­லாத பொய்­க­ளை­யும், புர­ளி­க­ளை யும், புழு­கு­க­ளை­யும் உறு­தி­மொ­ழி­க­ளா­கத் தேர்­தல் பரப்­பு­ரை­க­ளில் தெரி­விப்­ப­வர்­க­ளை­யும் அர­சி­ய­லில் இருந்து அப்­பு­றப்­ப­டுத்­து­வது மிக­மிக அவ­ச­ர­மா­ன­தும் அவ­சி­ய­மா­ன­தும் ஆகும்.

வாடிக்­கை­யா­ளர்­க­ளை­யும், வேடிக்­கை­யா­ன­வர்­க­ளை­யும் விட்­டு­விட்டு, தகு­தி­யா­னோரை இனங்­கண்டு வாக்­கா­ளர் சிட்­டை­யில் புள்­ளடி இடு­வ­து­தான் ‘தகு­தி­யும் நீதி­யு­மா­னது!’ இதனை, வாக்­கா­ளர் பெரு­மக்­கள் செய்­வார்­களா? புள்­ளடி இடும் வரை­தான் மக்­கள் ‘பெரு­மக்­கள்!’, இட்­ட­பின் ‘பெரு­மன்­னர்­கள்’ ‘பெரு­மக்­க­ளைக் கவ­னித்­துக்­கொண்­டால் நலன் பயக்­கும். நன்மை கிடைக்­கும் அடுத்­த­டுத்த தேர்­தல்­க­ளி­லும்!