May 14

டென்மார்க்கில் தமிழின படுகொலையின் 8 வது வருட நினைவுகள்.

டென்மார்க்கில் தமிழின படுகொலையின் 8 வது வருட நினைவுகள்.

முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின் நினைவாக பின்வரும் நிகழ்வுகள் டென்மார்க்கில் நடைபெறுகின்றன. நாளுக்கு நாள், மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம் நொடிக்கு நொடி தமிழினமே அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தது இருக்க இடமில்லை வலிக் மருந்து இல்லை.

வீழ்ந்தவர்கள் ஒருபுறம் விழுப்புண்பட்டவர்கள் ஒரு புறமாய் கண்முன்னே துடித்து துடித்து எம்மை விட்டுப்பிரிந்த நாள் அவர்களை நினைவு கூர்ந்து Grindsted நகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது.

காலம்: 14.05.2017

நேரம்: 15:45-17:00

இடம்: Grindsted kirke

               Kirkegade 1

              7200 Grindsted

  முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி வாரத்தை முன்னிட்டு København இல் 15.05.2017- 17.05.17 வரை தமிழின அழிப்பின் அடையாளங்களை வேற்றின மக்களுக்கு எடுத்துக்கூறும் முகமாக கண்காட்சியும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வும் நடைபெறுகின்றது.

15.05.2017  Nytorv

16.05.2017  Rådhudpladsen

17.05.2017  Nytorv

தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாட்கள், ஈழமக்களின் இறுதி மூச்சு தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக்கதற படுகொலை செய்யப்பட்ட நாள் மே 18. தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பேரணி தமிழின அழிப்பு நாள் மே18 அன்று தலைநகரில் பாரளுமன்ற முன்றலில் மு.ப 12 மணிக்கு ஆரம்பமாகிறது .எல்லோரும் ஒன்றாக இணைந்து சர்வதேசத்திடம் எமது மக்களிற்கு நீதி கேட்போம் வாருங்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 8ம் ஆண்டு நினைவு நாள் 20.05.2017 அன்று Randers நகரில் நடைபெறுகிறது. எமது உறவுகளை நினைத்து வணக்கம் செலுத்த அனைவரும் வாரீர். எம் இதயச்சுவர்களில் வலிகளால் பதியப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து, உறங்கிக்கிடக்கும் உலகின் மனச்சாட்சிகளை மீண்டுமொரு முறை தட்டி எழுப்புவோம். எம் உறவுகளுக்காய் நீதி கேட்போம். வாருங்கள் தாயக உறவுகளே!

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் .டென்மார்க்

https://youtu.be/eieWaMpba18