Jan 27

வடக்கு, கிழக்கில் முத­லீ­டு­களின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­திய சம்­பந்தன்

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வதன் அவ­சியம் குறித்து தற்­போது வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சர்­வ­தே­சத்தின் ஒத்­து­ழைப்­புடன் இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இந்த நிலையில் யுத்­தத்­தினால் முற்­று­மு­ழு­தாக அழி­வ­டைந்த வடக்கு, கிழக்கில் முத­லீ­டு­களை அதி­க­ரிக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் இலங்கை வந்­தி­ருந்த சிங்­கப்பூர் பிர­தமர் லீ ஹிசேயின் லூங், இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி ஜோக்கோ விடோடோ ஆகி­யோ­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இலங்கை வந்­தி­ருந்த இந்த இரு தலை­வர்­களும் நேற்று முன்­தினம் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். சிங்­கப்பூர் பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்­பின்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வின் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­திய சம்­பந்தன் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இணைந்து பணி­யாற்ற வேண்டும் என்றும் கூறி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கில் சிங்­கப்பூர் முத­லீட்­டா­ளர்கள் முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு ஊக்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். வடக்கு, கிழக்கில் உள்ள இளை­ஞர்கள் அர்ப்­ப­ணிப்­புள்ள கடி­ன­மான உழைப்­பா­ளிகள். ஆனால், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக யுத்­தத்தின் நிமித்தம் அவர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­பு­களும் திறன் அபி­வி­ருத்­திக்­கான வாய்ப்­புக்­களும் கிடைக்­க­வில்லை. சிங்­கப்பூர் அர­சாங்­கமும் மக்­களும் எமது இளை­ஞர்­களின் திறன்­க­ளையும் அறி­வையும் விருத்தி செய்­வ­தற்கு வேலை­வாய்ப்­புக்­களை அதி­க­ரிக்கும் வகை­யிலும் முத­லீ­டுகள் மேற்­கொள்ள முன்­வ­ர­வேண்டும். வடக்கு, கிழக்கில் பெரு­ம­ள­வான வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. விசே­ட­மாக இயற்கை துறை­முகம் ஒன்­றையும் மேலும் பல வளங்­க­ளையும் கொண்ட திருகோ­ண ­மலையில் முத­லீ­டு­களை மேற்­கொள்­வது தொடர்பில் சிங்­கப்பூர் கருத்தில் கொள்­ள­வேண்டும். எமது நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் முயற்­சியில் இந்த முத­லீ­டுகள் ஒரு பல­மாக அமையும் என்று எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

இதற்குப் பதி­ல­ளித்த சிங்­கப்பூர் பிர­தமர் வடக்கு, கிழக்கில் முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்­கான உங்­களின் கோரிக்கை குறித்து சிங்­கப்பூர் முத­லீட்­டா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி நட­வ­டிக்கை எடுப்பேன் என்று உறுதி வழங்­கி­யி­ருக்­கின்றார்.

இதே­போன்றே இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­பின்­போதும் யுத்­தத்­தினால் மிகவும் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள மக்­க­ளுக்கு பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. வேலை­வாய்ப்­பின்­மையும் அதனால் இளை­ஞர்கள் எதிர்­நோக்கும் விளை­வு­க­ளையும் முறை­யான பொரு­ள­ாதார முத­லீ­டு­களின் மூலம் தீர்க்க முடியும். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் இந்­தோ­னே­ஷியா முத­லீ­டு­களை செய்­வ­தனை உறு­திப்­ப­டுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்தும் வகை­யி­லான முத­லீ­டு­களை மேற்­கொள்­வதன் மூலம் இந்­தோ­னே­ஷியா இலங்­கைக்கு ஒத்­து­ழைப்பு வழங்க முடியும் என்று சம்­பந்தன் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார். இந்த விடயம் குறித்து தான் கவனம் செலுத்­து­வ­தாக இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­ப­தியும் உறுதி வழங்­கி­யுள்ளார்.

அண்­மையில் மலே­ஷியப் பிர­தமர் அப்துல் ரஸாக் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தார். இந்த விஜ­யத்­தின்­போது அவர் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இந்த சந்­திப்­பின்­போதும் வடக்கு, கிழக்கில் முத­லீ­டு­களை மலே­ஷியா மேற்­கொள்­ள­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து முத­ல­மைச்சர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் தமது வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது திண்­டாடி வரு­கின்­றனர். எனவே அப்­ப­கு­தியில் முத­லீ­டு­களை மேற்­கொண்டு அவர்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு மலே­ஷியா முன்­வ­ர­வேண்­டு­மென்றும் முத­ல­மைச்சர் கோரி­யி­ருந்தார்.

இலங்­கைக்கு வருகை தரும் வெளி­நாட்டுத் தலை­வர்­களை சந்­தித்து பேசு­கின்­ற­போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனோ அல்­லது வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனோ வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வெளி­நாட்டு முத­லீ­டு­களின் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். உண்­மை­யி­லேயே இது வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டாகும்.

மூன்று தசாப்­த­கா­ல­மாக இடம்­பெற்ற யுத்தம் கார­ண­மாக வடக்கு, கிழக்கில் பொரு­ளா­தா­ரத்­து­றை­யா­னது முற்­று­மு­ழு­தாக பாதிக்­கப்­பட்­டது. அங்­கி­ருந்த தொழிற்­சா­லைகள், நிறு­வ­னங்கள் என்­பன அழித்து ஒழிக்­கப்­பட்­டன. யுத்தம் கார­ண­மாக தொழிற்­சா­லைகள் செயற்­பட முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. காங்­கே­சன்­துறை சீமெந்துத் தொழிற்­சாலை, ஒட்­டு­சுட்டான் ஓட்டு தொழிற்­சாலை, பரந்தன் இர­சா­ய­னக்­கூட்­டுத்­தா­பனம், ஆனை­யி­றவு உப்­பளம் உட்­பட பல தொழிற்­சா­லைகள் இழுத்து மூடப்­பட்­டன. இன்­று­கூட காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சா­லையோ அல்­லது ஒட்­டு­சுட்டான் ஓட்டு தொழிற்­சா­லையோ இன்­னமும் மீள ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. யுத்தம் கார­ண­மாக வடக்கு, கிழக்கில் அழி­வுகள் ஏற்­பட்­ட­னவே தவிர ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

பொரு­ளா­தாரத் தடை கார­ண­மாக அங்கு பொது­மக்கள் பெரும் அவ­லங்­களைச் சந்­தித்­தனர். இதனால், சிறிய தொழிற்­சா­லைகள் கூட இழுத்­து­மூ­டப்­படும் நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது. முற்­று­மு­ழு­தாக பொரு­ளா­தார ரீதியில் அழி­வ­டைந்­துள்ள வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் மீளவும் முத­லீ­டு­களை உரு­வாக்கி தொழிற்­சா­லை­களை ஆரம்­பிக்­க­வேண்­டிய தேவை தற்­போது காணப்­ப­டு­கின்­றது.

யுத்­தத்தின் கோரத்­தாண்­ட­வத்­தினால் உயிர்­க­ளையும் உட­மை­க­ளையும் இழந்த அப்­ப­குதி மக்கள் தற்­போ­து­கூட தமது வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாத நிலையில் திண்­டா­டி­ வ­ரு­கின்­றனர். மொத்­தத்தில் 90 ஆயிரம் பெண்கள் வித­வை­க­ளாக்­கப்­பட்­டனர். 12 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட முன்னாள் போரா­ளிகள் புனர்­வாழ்வின் பின்னர் சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்­டனர். ஆயி­ர­க­ணக்­கானோர் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­டனர்.

இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்கள் உரிய வேலை­வாய்ப்­புக்­களைப் பெற முடி­யாது திண்­டா­டி­வ­ரு­கின்­றனர். இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்­களை வழங்கி அவர்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்த வேண்­டு­மாயின் வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் முத­லீ­டுகள் அதிகரிக்கப்­ப­டு­வது இன்­றி­ய­மை­யா­த­தாகும். அங்கு புதிய புதிய தொழிற்­சா­லைகள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். சுற்­றா­ட­லுக்கும் சமூக, கலா­சார விழு­மி­யங்­க­ளுக்கும் பாதிப்­புக்கள் ஏற்­ப­டா­த­வ­கையில் தொழிற்­சா­லைகள் அமைக்­கப்­ப­டு­வ­துடன் அப்­ப­குதி மக்­க­ளுக்கு அங்கு வேலை­வாய்ப்­புக்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும்.

இத்­த­கைய நிலை உரு­வாக வேண்டும் என்­ப­தற்­கா­கவே வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் முத­லீ­டு­களை மேற்­கொள்ள முன்­வ­ர­வேண்­டு­மென்று வெளி­நா­டு­க­ளிடம் தமிழ் தலை­வர்கள் கோரி­ வ­ரு­கின்­றனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு உதவும் வகையில் வடக்கு, கிழக்கில் முத­லீ­டு­களை மேற்­கொள்ள புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் முன்­வந்­தி­ருந்­தனர். அவ்­வாறு புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் முன்­வந்­த­போதும் அவர்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்கும் வகையில் அன்­றைய அர­சாங்கம் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. புலம் பெயர்ந்த தமிழ் மக்­களை சந்­தேகக் கண்­கொண்டு அன்­றைய அர­சாங்கத் தரப்­பினர் பார்த்­தனர். இதனால் புலம்பெயர்ந்த தமி­ழர்­களின் முத­லீ­டுகள் கூட ஒழுங்­கான முறையில் வடக்கு, கிழக்குப் பகு­திகளுக்கு வர­வில்லை.

ஆனால், தற்­போது நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து நாட்டில் முத­லீ­டு­களை ஊக்­கு­விப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. வடக்கு, கிழக்கில் முத­லீ­டு­களை ஊக்­கு­விக்கும் வகை­யி­லான சில செயற்­றிட்­டங்­க­ளையும் அர­சாங்கம் மேற்­கொண்­டுள்­ளது. இத­னை­விட முன்னாள் போரா­ளி­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்­களை வழங்கும் வகையில் சில சம்­பள மானி­யத்­திட்­டங்­க­ளையும் இந்த ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டத்தில் அரசாங்கம் முன்வைத்துள்ளது.

அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில் முதலீடுகளை ஊக்கு­விப்பதற்காக அங்கு அதனை செய்யும் கம்பனிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு 50 வீத மின்சார சலுகையினை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நெடுந்தீவு, கிளிநொச்சிப் பகுதிகளில் உணவு பதனிடும் தொழிற்சாலையை அமைக்கவும் மயிலிட்டி மீன்பிடித்துறை முகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அரசாங்கம் இந்த வரவு–செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு அரசாங்கம் சில சலுகைகளை அறிவித்துள்ளதைப் போன்று வெளிநாட்டு முதலீடுகளையும் புலம்பெயர் மக்களின் முதலீடு­களையும் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை­யினை முன்னெடுக்கவேண்டும். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் முதலீடுகள் முழுமையாக அதிகரிக்கவேண்டுமானால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவது அவசியமானதாகும். எனவே, அரசாங்க­மானது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்வதுடன் முதலீடுகளை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.