May 14

கனேடியச் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கொள்கை மீளாய்வு

கனேடியச் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திசெய்ய உதவி வழங்குவதைத் தடைசெய்யும் தனது கொள்கையை மீளாய்வு செய்வதாகக் கனேடிய மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த குடிவரவுத்துறை அதிகாரிகள், தற்போது தமது கடவுச்சீட்டு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திசெய்ய தமது அலுவலர்கள் உதவி வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திசெய்ய உதவிபெற குடும்ப அங்கத்தவர் ஒருவரையோ அல்லது நண்பர் ஒருவரையோ அழைத்துவரவேண்டும் எனவும் தெரிவித்தனர். இக்கொள்கை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுகின்றது.

கடந்த 5 வாரங்களில் மாற்றுத்திறனாளிகள் இருவர் ஒன்ராரியோவில் உள்ள Service Canada அலுவலகங்களில் தமக்கு கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திசெய்ய உதவிகள் வழங்கப்பட இல்லை என முறைப்பாடு செய்திருந்தனர். 

மீளாய்வு செய்யப்பட்ட கொள்கைகள் எப்போது அமுலுக்கு வரும் என்பது தொடர்பாகக் குடிவரவு அதிகாரிகள் ஏதும் குறிப்பிடவில்லை.