May 14

திறமை மிக்கவர்களைக் கவர உலகளாவிய ரீதியில் போட்டியிடும் கனடா

ஆற்றல் மிக்கவர்களைக் கவர உலகநாடுகளுடன் கடுமையான போட்டியில் ஈடுபடவேண்டிய நிலையில் கனடா உள்ளதாகவும், அதேசமயம் கனடாவிற்கு வரும் புதிய குடிவரவாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள இன்னும் அதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது  எனவும் கனேடியக் குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Conference Board of Canada என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான குடிவரவு தொடர்பான உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு ஆற்றிய ஆரம்ப உரையின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  இவ்வாண்டு இந்த உச்சிமாநாடு ஒட்டாவா நகரில் நடைபெறுகிறது.


குடிவரவின் மூலம் கனடாவின் சனத்தொகையை அதிகரிப்பதனால் பொருளாதார வளர்சியை ஏற்படுத்துவதுடன், துரிதமாக முதுமையடையும் கனேடியர்களின்  மீதுள்ள பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த தொழில் மற்றும் மொழிப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்படும் ஜேர்மானியக் குடியமர்வு மாதிரிகளை   (settlement models) கனடா ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.