May 13

ஐ.பி.எல் திருவிழா; குஜராத்தை வென்ற சன்ரைசர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி

ஐ.பி.எல். தொடரில் கான்பூரில் நடைபெற்ற 53ஆவது போட்டியில் குஜராத் லயன்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச் சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் அணி இஷான் கிஷன் (61), டுவையின் ஸ்மித் (54) ஜடேஜோ(20) ஆகியோரால் 154 ஓட்டங்கள் சேர்த்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

பின்னர் 155ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தவான், வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 

அடுத்து வந்த ஹென்றிக்ஸ் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 25 ஓட்டங்களுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த சன்ரைசர்ஸ் சற்று தடுமாறியது.

3ஆவது விக்கெட்டுக்கு வார்னர் உடன் தமிழக வீரர் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்தது.

இருவரும் அரைசதம் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 158 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாயசத்தில் அபார பெற்றி பெற்றது. வோர்னர் 69 ஓட்டங்களுடனும், விஜய் சங்கர் 63 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 14 போட்டிகளில் 8 வெற்றி, ஒரு சமநிலை என 17 புள்ளிகளுடன் பிளோ ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.