May 13

குழந்தைப் பேறு மருத்துர் அனலைதீவில் வைத்தியசாலை கட்ட உதவினார் கனடாவில் சிறந்த சேவைக்கான விருது

சிறந்த சேவைக்கான விருது

Dr. Coomarasamy Kiruba

‘நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அன்பைத் தூவுங்கள் உங்களை நாடி வருகின்ற அனைவரையும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்ல வையுங்கள் உலகம் அமைதி பெறும் ‘

வைத்திய கலாநிதி குமாரசாமி கிருபானந்தன். தமிழர்கள் செறிந்து வாழும் Scarborough பகுதியில் உள்ள Scarborough Hospital இன் மகப்பேற்றுத் துறையின் முக்கியமான மருத்துவ ஆழுமை. அனலைதீவு என்ற சிறு தீவில் பிறந்து வளர்ந்த இவர் தனது கடினமா முயற்சிகளால் சிகரம் தொட்ட சாதனையாளராக மாறியவர்.ஏறத்தாள மூன்று தசாப்தங்களாக கனேடிய மண்ணில்; வைத்திய கலாநிதி கிருபானந்தன் அவர்கள் மகப்பேற்று மருத்துவத் துறையில் ஆற்றி வரும் சேவைகள் அளப்பெரியவை.

கனிவான பேச்சும் நம்பிக்கையளிக்கும் அணுகுமுறையும் Scarborough வைத்தியசாலைக்கு மகப்பேற்று சிகிச்சைக்காக வரும் பலரையும் கவர்ந்துள்ளது. இதனால் தான் இவரின் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை பெறுவதற்காக ரொரன்ரோ பெரும்பாகத்தில் இருந்தும் பலநூற்றுக் கணக்கானவர்களை Scarborough வைத்தியசாலையை நாடிவரவைத்துள்ளது. ரொரன்ரோ பெரும்பாகத்தில் மகப்பேற்று மருத்துவத் துறையில் சிறந்த சிகிச்சையினை வழங்கும் வைத்தியசாலையாக Scarborough வைத்தியசாலை திகழ்வதற்கு இவரின் அர்ப்பணிப்பான சேவை மிக முக்கிய பங்கினை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

தான் பிறந்து வளர்ந்த மண்ணில் சிதைந்தழிந்து போயிருந்த மருத்துவமனையை சீரமைத்து அதற்கு நிரந்தரமான மருத்துவர் ஒருவரை நியமித்து தனது ஊர் மக்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் மிக முக்கியமானவை. தான் உண்டு தன் வாழ்வுண்டு என்று சுயநல வாழ்வில் தொலையாமல் தான் வாழும் சமூகத்திற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதற்காய் தொடர்ந்து இயங்கி வரும் இவருக்கு அர்பணிப்பு மிக்க சமூக சேவைக்கான விருதை வழங்கி மேன்மை கொள்கின்றது 

இவ்விருதை SUGSHE GROUP OF COMPANIESநிறுவன அதிபர் திரு சுகுமார் கணேசன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்