May 13

உலகின் மிக பிசியான விமான நிலையமாக மும்பை சாதனை

உலகின் மிக பிசியான விமான நிலையங்களில் லண்டன் காட்விக் விமான நிலையத்தை பின்னுக்கு தள்ளி ஒரே ஒரு ரன்வேயை மட்டும் வைத்துள்ள மும்பை விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.

837 வருகை மற்றும் புறப்பாடு

இந்த ஒரு ரன்வேயில் தான் பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானங்கள் விமான நிலையத்திற்குள் நுழைகின்றன. சராசரியாக 65 நொடிகளுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு விமானம் புறப்படவோ அல்லது வருகை தரவோ செய்கின்றன. சராசரியாக ஒரு நாளில் மும்பை விமான நிலையம் 837 வருகை மற்றும் புறப்பாடுகளை சந்திக்கிறது. அதே வேளையில், லண்டன் காட்விக் விமான நிலையம் 757 வருகை மற்றும் புறப்பாடுகளை மட்டுமே சந்திக்கிறது.

சிறந்த அர்ப்பணிப்பு

இந்த சாதனை விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர்களின் சிறந்த அர்ப்பணிப்பு உணர்வை காட்டுவதாக விமான நிலைய மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.