May 13

நாய்களை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம்

நாய்கள், சுண்டெலி, முஞ்சூறு மற்றும் சுறா போன்ற பாலூட்டிகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்ற வாதம் இருந்து வருகிறது. ஆனால் அவற்றை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மியாமியில் உள்ள ரட்சர்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஜான் பி மெக்கன் மோப்ப சக்தி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதில் நாய், சுண்டெலி உள்ளிட்ட மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என கண்டு பிடித்தார். பொதுவாக மனிதர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளை நுகர்ந்து அவை எவை என கூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 1879-ம் ஆண்டில் விஞ்ஞானி புரோகா இதுகுறித்து ஒருஆய்வு கட்டுரை வெளியிட்டார். அதில் மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.