Jan 22

உலக வர்த்தக கண்காட்சி 2025! - பிரான்ஸ் வெளியேறியது!

2025 ஆம் ஆண்டுக்கான உலக வர்த்தக கண்காட்சியில் (l'exposition universelle) இருந்து பிரான்ஸ் உத்தியகபூர்வமாக வெளியேறியுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

 சனிக்கிழமை பிரதமர் எத்துவா பிலிப் இதனை அறிவித்துள்ளார். '2025 ஆம் ஆண்டுக்கான உலக வர்த்தக கண்காட்சி போட்டியாளர்கள் பட்டியலில் இருந்து நாம் (பிரான்ஸ்) உத்தியோகபூர்வ மாக வெளியேறியுள்ளோம்' என குறிப்பிட்டுள்ளார்.

பலவீனமான பொருளாதார நிலையிலேயே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு அரசு தயாராகி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, இல்-து-பிரான்ஸ் முதல்வர் Valérie Pécresse மற்றும் BID அமைப்பி. தலைவர் Jean-Christophe Fromentin ஆகியோரும் இந்த முடிவுக்கு தலைசாய்த்துள்ளனர். பிரான்ஸ் 2025 ஆம் ஆண்டுக்கான உலக வர்த்தக கண்காட்சியில் பங்கேற்காது.