Jan 22

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழ்ச்சோலை மற்றும் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் இணைந்து திருவள்ளுவர் ஆண்டு 2049 ஐ வரவேற்றிருந்தனர்.

திருவள்ளுவர் ஆண்டு 2049 தைத்திருநாள் ஸ்ரார்ஸ்பூர்க் மாநகரில் 20.01.2018 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பொங்கல் பொங்கிகதிரவனுக்கு நன்றி செலுத்தி நடைபெற்ற விழாவில் பிரதமவிருந்தினர்களாக ஸ்ராஸ்பூர்க் நகரின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்னோல்ட்யுங் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு.மோறர் அவர்கள் ஸ்ரார்ஸ்பூர்க் மாநகர உதவி நகரபிதா, ஸ்ரார்ஸ்பூர்க் ஐரோப்பிய அபிவிருத்திக் குழுஉப தலைவி, ஐரோப்பிய பெண்கள் அமைப்புத் தலைவி, மற்றும் அருட்தந்தை ஜெரார்ட் அவர்களுடன் வேற்றின மக்களின் அமைப்பு பிரதிநிதிகள்,தமிழ்ச் சோலை மாணவர்கள் மற்றும் ஆசிரியரும் மங்கள விளக்கேற்றிச்  சிறப்பித்திருந்தனர். தமிழீழ மண்மீட்புப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்மற்றும் பொதுமக்களுக்காக அக வணக்கம் செலுத்தி கலைநிகழ்வுகள் தொடக்கப்பட்டன.

அந்தவகையில் எழுச்சி நடனங்கள், பரதநாட்டியம்,காவடி, கும்மி, கோலட்டம், நாடகம், வயலின் இசை மற்றும் மேலைத்தேய நடனங்களுடன் கவிதை, பேச்சு, எழுச்சி கானங்கள் என்பனவும்இடம்பெற்றன. அதேவேளை பாரீஸ் நகரம் சென்று திருக்குறள் போட்டிகளில் பங்கு கொண்டு, முதலாம் இடத்தில் வெற்றிபெற்ற நான்குமாணவர்களுக்கு கேடயமும், மற்றும் சான்றிதழ்களும், பதக்கங்களும் கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் குறிப்பாக 20ம் நூற்றாண்டில் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட ஆர்மேனியரும்  கலந்துகொண்டிருந்தனர். நூறு ஆண்டுகளைக்கடந்தபின்னும், ஆர்மேனியில் நடாத்தப்பட்ட இனவழிப்பை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவைக்கவும் அதற்கான நீதியையும் நட்டஈட்டையும்பெற்றுக்கொள்ளவும் இன்றுவரை அயராது போராடிவருகின்றவர்கள் என்ற வகையில் எமது  புத்தாண்டுநிகழ்வில் கலந்து கொண்டதுடன் எமதுவிடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவையும் தெரிவித்திருந்தனர்.

இப்புத்தாண்டு நிகழ்வில் தமிழினப்படுகொலையை உலக நாடுகள்கண்டுகொள்ள வைப்பதுடன் தமிழினப் படுகொலைக்கான அனைத்துலக சுயாதீன விசாரணைக்கான அறைகூவலும் விடப்பட்டது. இறுதியில்நம்புங்கள் தமிழிழம் நாளை பிறக்கும் பாடலுடன் இனிதே நிறைவுக்கு வந்தது.