Jan 19

ஐரோப்பாவில் கடுமையாக சுழன்றடிக்கும் புயல்: விமானம், ரயில்,சாலை போக்குவத்து முடக்கம்

ஐரோப்பாவில் கடுமையான புயல் வீசுவதால் விமான, ரயில் போக்குவத்து முடங்கியுள்ளது. இதனால் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. மரங்கள் சாய்ந்ததாலும் புயலால் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெதர்லாந்தில் அனைத்து ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்துள்ளது.ருமேனியாவில் பல இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் முக்கிய சாலைகள், துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கண மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

ஜெர்மனியில் பெரும்பாலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் புயலால் கற்கள் விழுவதால் கார்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சிறுவர்கள் வீட்டிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.  இங்கிலாந்தில் புயலால் மரங்கள் ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளதால் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு வீடுகளில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். புயலால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.