Jan 18

10 ஆண்டுகளுக்கு பின் சுவிஸில் பயங்கரமான பனிப்பொழிவு

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிந்து வருகிறது.உலகின் மிக குளிர்ச்சியான கிராமத்தில் கண் இமைகள் கூட உறைந்து விடும் நிலையில் பனிக்கொட்டி வருகிறது.

இந்நிலையில் ஒரேநாளில் சுமார் 2 மீட்டர் அளவு பனிப்பொழிந்ததால் வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டு சுவிட்சர்லாந்தில் உள்ள விடுதி ஒன்றில் 13,000 சுற்றுலா பயணிகள் இரண்டு நாட்களாக பரிதவித்து வந்தனர்.

கடந்த திங்களன்று தொடங்கிய பனிப்பொழிவின் அளவு 24 மணி நேரத்தில் 6 அடி 6 இன்ச் ஆக பதிவாகியுள்ளது, அதாவது 2 மீட்டர் உயரம்.எனவே Valais மாகாணத்தின் Simplon region தொடர்புகள் ஏதுமின்றி துண்டிக்கப்பட்டுள்ளது,

விடுதியை சுற்றியுள்ள மலைவழி பாதை, ரயில் பாதை, சாலைகள், ரோப் கார் போன்ற அனைத்து தடங்களும் இடர்பாடில் சிக்கி முடங்கியுள்ளது.<p>கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான மிக அதிக பனிப்பொழிவு இது என்பதும் குறிப்பிடதக்கது.