May 13

பாகுபலி 2 படத்தை பார்த்து கண்ணீர் விட்ட ரம்யா கிருஷ்ணன்!

சமீபத்தில் வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா கேரக்டர்களை அடுத்து அனைவரையும் கவர்ந்த கேரக்டர்கள் ராஜமாதா சிவகாமி மற்றும் கட்டப்பா.

இந்த இரண்டு கேரக்டர்கள் தான் கதையை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும். பாகுபலி படத்தின் வசூலில் 1000 கோடியை தாண்டியதால், மொத்த வசூல் 2000 கோடியை தொடுமா என பாக்ஸ்ஆபிஸ் வட்டாரத்தில் எதிர்பார்க்கின்றனர்.

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பாகுபலி மட்டுமின்றி மற்ற துணை கதாபாத்திரங்களும் தான். ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். சில சீன்களில் அவரது நடிப்பை பார்த்துவிட்டு அழுதுவிட்டதாக பல ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். படத்தை முதன்முறையாக பார்த்தபோது தனக்கு கண்ணீர் வரவைத்த சீன் எது என ரம்யா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக ஹைதராபாத்தில் முழு டீமுக்கும் ராஜமௌலி படத்தை போட்டு காட்டினார். பாகுபலியை கொன்றுவிட்டு கட்டப்பா சிவகாமியிடம் வந்து பல்வாள்தேவன் பற்றிய உண்மையை கூறிய போது, படம்பார்த்து கொண்டிருந்த எனக்கு கண்ணீர் வந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.