May 12

ரொறன்ரோ மிருககாட்சிசாலை மூடப்பட்டுள்ளது: ஊழியர்கள் போராட்டம்

ரொறன்ரோ மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமான மிருககாட்சிசாலை மூடப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) குறித்த போராட்டத்தை 400இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் முன்னெடுத்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கும் பொது ஊழியர்களின் கனடிய யூனியன் (CUPE) அமைப்பிற்கும் இடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தின் காரணமான பராமரிப்பு நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்பவில்லை எனவும் மீண்டும் மிருகக்காட்சிசாலை எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பிலும் அறிவிக்கப்படவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.