Jan 17

ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள்

இலங்கை அர­சி­யல்­வ­ர­லாற்­றில் ஈழத் ­தமி­ழி­னத்­துக்கு எதி­ராக அவ்­வப்­போது சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளால் இன­வா­தத் தீ மூட்டி விடப்­பட்­ட­தற்­கும், ஜன­வரி மாதத்­துக்­கும் ஏதோ ஒரு­வித நெருங்­கிய தொடர்பு உள்­ளது.

தமி­ழி­னத்­தின் உரி­மை­க­ளுக்கு வேட்­டு­வைக்­க­வும் , உரிமைகளைப் பறித்­தெ­டுக்­க­ வும், பல படு­கொ­லை­களை தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­ற­வும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி, மற்­றும் சிங்­கள இடது சாரிக்­கட்­சி­கள் தேர்ந்­தெ­டுத்­தது, பெரும்­பா­லும் ஜன­வரி மாதத்­தையே என்­றால்­கூட அதில் தவ­றே­தும் கிடை­யாது.

அர­சி­யல் இலா­பம் ஈட்­டும் நோக்­கில், இன­வா­த­தத்தை முன்­வைத்து ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய தலைமை அமைச்சரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா தலை­மை­யி­லான அரசு, தனிச்­சிங்­க­ளச் சட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­தில் கொண்டு வந்து நிறை­வேற்­றி­யது.

‘ஒரு ெமாழி என்­றால் இரு நாடு­கள், இரு­மொ­ழி­கள் என்­றால் ஒரு நாடு’ என்று நியா­யத்­துக்­கா­கக் குர­லெ­ழுப்பிய கலா­நிதி கொல்­வின் ஆர்.டி. சில்வா மற்­றும் இடது சாரித் தலை­வர்­கள், நாடு முழு­வதும் என்றல்­லாது வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் மட்­டும் செயற்­ப­டுத்­தக்­கூ­டிய தமிழ்­மொ­ழி­வி­சேட ஏற்­பா­டு­கள் சட்­ட­மூ­லத்தை 1966 இல் எதிர்த்­தி­ருந்­த­னர்.

இனவாதத்தை முன்னிறுத்தி ஆட்சியைக் கைப்பற்றும் உத்தி இன்று நேற்று ஆரம்பமான ஒன்றல்ல

தமிழ் மொழிக்கு நிர்­வாக மொழி உரி­மையை நாட்­டின் குறித்­த­ வொரு பகு­திக்குத்தானும் வழங்­கி­னா­லும், அது சிங்­க­ள­மக்­க­ளுக் கெ­தி­ரா­னது என­வும், அத­னால் தமிழ்­மொ­ழிக்கு சட்­ட­ரீ­தி­யான எந்­த­ வொரு உரி­மை­யை­யும் வழங்­கக்­கூ­டாது என­வும் 1966 ஆம் ஆண்டு ஜன­வரி எட்­டாம்­தி­கதி நாட்­டில் கம்­யூ­னிஸ்­கட்சி, சம­ச­மா­ஜக்­கட்­சித்­த­லை­வர்­கள் உட் பட மற்­றும் இன­வாத அமைப்­பு­க்களது தலை வர்களும் ஒன்­று­சேர்ந்து எதிர்ப்பு ஊர்­வ­லத்­தை­யும் கண்­ட­னக்­கூட்­டத்­தை­யும் நடத்­தி­யி­ருந்­த­னர்.

ஊர்­வ­லத்­தைக் கலைப்­ப­தற்கு பொலி­சார் துப்­பாக்­கிச் சூடு மேற்­கொண்­ட­தில் பௌத்த பிக்கு ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

இந்­தச் சம்­ப­வம், ஐக்­கிய தேசி­யக்­கட்சி, தமி­ழ் அரசுக்­கட்சி உட்­பட சில இன­வா­தக்­கட்­சி­க­ளும் கூட்­டுச்­சேர்ந்து நடத்­திய ஆட்­சி­யின்­போது நடை­பெற்­றி­ருந்­தது.

பண்டா, செல்வா ஒப்­பந்­தத்­தில் இடம் பெற்­றி­ருந்த மொழி தொடர்­பான குறிப்­பிட்ட விதி­களை அதா­வது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமி­ழை­யும் நிர்­வாக மொழி­யா­கப் பயன்­ப­டுத்­த­லாம் என்ற விதியை எதிர்த்து கொழும்­பி­லி­ருந்து கண்­டிக்­குப் பாத­யாத்­தி­ரையை மேற்­கொண்ட ஜே.ஆர் ஜெய­வர்த்­தன, 1966 ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி – தமி­ழ் அரசுக்­கட்சி கூட்­ட­ர­சில் குறித்த அந்தப் பிரே­ர­ணையை முன்­வைத்­த­வர் என்­ப­தும் இலங்கை அர­சி­ய­லில் வர­லாற்­றின் முக்­கிய பதி­வா­கும்.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள மக்­க­ளைத்­தூண்­டி­விட்டு அதன் மூலம் அர­சி­யல் ஆதா­யம் பெற்று ஆட்­சியை காலம் கால­மா­கத் தக்­க­வைப்­பதே அன்­றைய சிங்­க­ளக்­கட்­சி­க­ளின் நோக்­க­மாக இருந்­தது.

தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­யா­யி­ருந்த பூர்­வீக நிலங்­கள், ஏனைய சொத்­துக்­கள் தென்­னி­லங்­கை­யி­லும், வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் எவ­ரி­டம் கைமா­றி­யுள்­ள­ன? பலாத்­கா­ர­மாக எப்­ப­டித்­திட்­ட­மிட்­டுப் பறிக்­கப்­பட்­டுள்­ளன? என்­பதை வர­லாறு தெளிவு­ப­டுத்­தும்.

நாட்­டின் இன­வாத அடிப்­ப­டை­யில் தோற்­று­விக்­கப்­பட்ட வன்­மு­றைக் கலா­சா­ரம், அர­சி­யல் இலா­பம் கருதி இரு பெரும் சிங்­கள தேசி­யக்­கட்­சி களால் கடந்த 70 ஆண்­டு­க­ளாக காய் நகர்த்தப் பட்டு வரு­கின்­றது.

இதற்கு அடிப்­ப­டை­யாக அமைந்­தி­ருந்­த­தும் ஒரு ஜன­வரி மாத­மே­யா­கும். அது 1966 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட் டாம்­தி­கதி இடம் பெற்ற முக்­கிய சம்­ப­வ­மா­கும்.

திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்

நாடு முழு­வ­தும் ஒற்­று­மை­யாக வாழ்ந்த தமிழ்­மக்­களை 1958ஆம் ஆண்டில் இடம்­பெற்ற இனக்­க­ல­வ­ரம் மூல­மாக சிங்கள அரசியல் வாதிகள் சிங்­கள மக்­க­ளுக்கு இனத்துவே­சத்­தை­ யூட்டி இனப்­ப­கையை உண்­டாக்­கி­ய­வ­ர­லா­றும் இச்­சம்­ப­வங்­க­ளுக்­குள் அடக்­கம்.

1974 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதன்­மு­றை­யாக நான்கா­வது உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஏற்­பா­டு­கள் மேற்கொள்ளப்பட்டபோது அதனைக் கொழும்­பில் நடத்­து­மாறு அப்­போ­தைய தலைமை அமைச்சரான சிறி­மாவோ பண்­டார நாயக்கா தலை­மை­யி­லான அரசு, உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி மன்­றத்­தி­ன­ரி­டம் கேட்­டுக்­கொண்­டது.

யாழ்ப்­பா­ணத்­தில் முற்றுமுழுதாகத் தமிழ்­மக்­களே வாழு­கின்­ற­ப­டி­யி­னால் அங்­கேயே மாநாட்டை நடத்­து­வ­து­தான் பொருத்­த­மா­கு­மெ­னக்­கூறி அந்த அமைப்பினர் அதனை மறுத்­து­விட்­ட­னர்.

1974 ஆம் ஆண்டு ஜன­வரி 4 ஆம் தொடங்கி 10 ஆம்­தி­கதி வரை யாழ்ப்பாணத்தில் கோல­ாக­ல­மாக நடை­பெற்ற தமி­ழா­ராய்ச்சி மாநாட்­டின் இறுதி நாளன்று நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த தமிழ் மக்­கள் மீது, குரோத உணர்­வு­டன் சிறி­மாவோ அரசு திட்­ட­மிட்டு பொலி­சா­ரைக்­கொண்டு தாக்­கு­தல்­களை நடத்தி முடித்­தி­ருந் தது.

தமிழ்­மக்­கள் சிதறி ஓடு­கை­யில் பொலி­சார் உயர் அழுத்­த­மின்­சா­ரக்­கம்­பி­கள் மீது துப்­பாக்­கிப்­பி­ர­யோ­கம் மேற்­கொண்­ட­போது கம்­பி­கள் அறுந்து வீழ்ந்­த­தில் ஒன்­பது தமி­ழர்­கள் படு கொலை செய்­யப்­பட்­ட­னர்.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி அரசு கிழக்கு மாகா­ணத்­தில் பல படு­கொ­லைச்­சம்­ப­வங்­களை தனது 11 வரு­ட­கால ஆட்­சி­யில் நடத்­தி­யி­ருந்­தது. அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­க­ளில் தமி­ழர்­கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்து வந்த பல கிரா­மங்­க­ளில், மக்­கள் படை­யி­ன­ரால் கொன்­ற­ழிக்­கப்­பட்ட சம்­ப­வங்­களை எளி­தில் எவ­ரா­லும் மறந்திட ­மு­டி­யாது.

அதில் ஒன்று 1987 ஆம் ஆண்டு ஜன­வரி 28, 29 ஆம் திக­தி­க­ளில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள கொக்­கட்­டிச்­சோலை தமிழ்க்­கி­ரா­மத்­தில் நூற்­றுக்கும் மேற்­பட்ட அப்­பா­வித்­த­மிழ் மக்­கள் படை­யி­ன­ரின் தாக்­கு­தல்­க­ளில் கொன்­றொ­ழிக்­கப்­பட்ட கொடும் துய­ரம் மிக்க, தமி­ழர்­க­ளின் நெஞ்­சங்­களை உறை­ய­வைத்த சம்­ப­வ­மா­கும்.

இந்தக் கொ­லைச்­சம்­ப­வம் தொடர்­பாக மறைந்த மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான யோசப் பர­ரா­ஜ­சிங்­கம் ஐ.நா.வின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்­தி­ருந்­தார். அதன்­பின்­னரே ஐக்­கிய தேசி­யக்­கட்சி அரசு செய்­தி­ருந்த அந்­தப் படு­கொ­லைச் சம்­ப­வம் குறித்த விவ­ரங்­கள் பன்­னாட்­டு­கள் மட்­டத்­தில் தெரிய வந்­தன.

இதுவரை நீதி வழங்கப்படாத திருகோணமலை மாணவர்கள் படுகொலை விவகாரம்

2006 ஆம் ஆண்டு ஜன­வரி இரண்­டாம் திகதி திரு­கோ­ண­ம­லை­யில் பிர­பல கல்­லூ­ரி­க­ளில் உயர்­தர வகுப்­பில் கல்வி கற்று வந்த ஐந்த மாண­வர்­க­ள் வழ­மை­போன்று காந்தி சிலைக்­க­ரு­கி­லி­ருந்து உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­னர்.

2005,2006 ஆம் கல்­வி­யாண்டில் பல்­க­லைக்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வா­கி­யி­ருந்த இந்­துக்­கல்­லூரி மாண­வர்­க­ளான நாலு­பே­ரும் அவர்­க­ளின் மாணவ நண்­ப­ரான மற்றொருவருமான ஐந்­து­பேரே அவர்­க­ளா­வர். தங்­கத்துரை சிவா­னந்தா, மனோ­கரன் ரஜீகர், சண்­மு­க­ராஜா கஜேந்­தி­ரன், லோ.ரோகன், யோ.ஹேமச்­சந்­தி­ரா ஆகிய மாண­வர்கள் துப்­பாக்­கிச் சூட்­டில் படு­ கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது அந்த வேளை­யில் தமி­ழர்­கள் மத்­தி­யில் பெரும் அச்­சத்­தை­யும் ஆத்­தி­ரத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

அதி­ர­டிப்­ப­டை­யி­னர் எனக்­க­ரு­தப்­பட்ட சீரு­டை­யி­னர், அந்த மாண­வர்­களை நிலத்­தில் படுக்­க­வைத்து காதுக்­குள் துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­ட­தால் மாண­வர்­கள் அனை­வ­ரும் மூளை சிதறி இறந்­தி­ருந்­த­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­தப் படு­கொ­லை­கள் சம்­பந்­த­மாக சந்­தே­கத்­தின் பேரில் 12 ஆயு­தப்­ப­டை­யி­னர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். குறித்த மாண­வர்­க­ளின் படு­கொ­லைச்­சம்­ப­வங்­கள் சர்­வ­தேச அள­வில் கவ­னத்தை ஈர்த்த சம்­ப­வ­மாகப் பதி­வா­கி­யி­ருந்­தது 2014 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமை மாநாட்­டின்­போது மனித உரி­மை­கள் ஆணை­யத்­தின் ஆணை­யா­ளர் நாய­க­மான நவ­நீ­தம்­பிள்ளை 20 பக்­கங்­களை கொண்­ட­தும் 74 விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­துமான இலங்­கை­யில் இடம்­பெற்ற பார­தூ­ர­மான மனித உரிமை மீறல் சம்­ப­வங்­களை உள்­ள­டக்கி வெளியிட்ட அறிக்­கையில் குறிப்­பிட்ட திரு­கோ­ண­ மலை மாண­வர்­க­வ­ளது படு­கொ­லைச் சம்­ப­வ­மும் உள்­ளக்­கப்­பட்­டி­ருந்­தது.

திரு­கோ­ண­ம­லை­யில் படு கொலை செய்­யப்­பட்­ட­ஐந்து மாண­வர்­கள் தொடர்­பான வழக்கு பிர­சித்தி பெற்ற சட்டத்துறை நிபு ணர்கள் உள்­ள­டங்­கிய உத­ல­கம ஆணைக் கு­ழு­வி­னால் கடந்த 2006, 2007 காலப்­ப­கு­தி­க­ளில் விசா­ரிக்­கப்­பட்டு வந்த போதி­லும் மகிந்த அரசோ,குறித்த ஆணைக்­கு­ழு­வின் அறிக்­கையை ஒரு­போ­தும் வெளியிட்­டி­ருக்­க­வில்லை.

அதே காலப்­ப­கு­தி­க­ளில் ஐந்து மாண­வர்­க­ளின் படு­கொ­லைச்­சம்­ப­வங்­கள் இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வி­னா­லும் விசா­ரிக்­கப்­பட்­டி ­ருந்­தது.

நல்­லி­ணக்க ஆணைக்­குழு குறித்த படு­கொ­லை­கள் பற்­றிய மேல­திக விசா­ர­ணை­களை அரசு மேற்­கொள்ள வேண்­டு­மென நவ­நீ­தம் பிள்­ளை­யின் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வர் ரஜீ­க­ரின் தந்­தை­யான மருத்­து­வ­ரான காசிப்­பிள்ளை மனோ­க­ரன் 2014 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேர­வை­யில் இப்­ப­டு­கொலை தொடர்­பாக பன்னாட்டு விசா­ரணை வேண்­டு­மென கோரிக்கை விடுத்­தி­ ருந்­தார்.

2013 ஆம் ஆ்ண்டு பெப்­ர­வரி மாத­மும் இதே­பே­ர­வை­யில் இப்­ப­டு­கொலை சம்­பந்­த­மாக இலங்கை அரசு எவ்­வித விசா­ர­ணை­களையும் மேற்­கொள்­ள­வில்லை என்ற குற்­றச்­சாட்­டை­யும் அப்­போது முன்­வைத்­தி­ருந்­தார்.

தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான இரா. சம்­பந்­தன் பிரித்­தா­னிய நாடா­ளு­மன்­றக் குழு அறை 14 இல் நடை பெற்ற தமி­ழர் பேர­வை­யின் மூன்­றா­வது ஆண்டு கருத்­த­ரங்­கில் உரை­யாற்­று­கை­யில் திரு­கோ­ண­ம­லை­யில் 5 மாண­வர்­க­ளின் படு­கொலை, மூதூ­ர।ில் தொண்­டர் அமைப்­பைச்­சேர்ந்த 17 உத­விப்­ப­ணி­யா­ளர்­க­ளின்­ப­டு­கொ­லை­கள் என்பவை தொடர்­பில் இலங்கை அரசு உறுதி மொழி வழங்­கி­யி­ருந்­தும் அந்த விசா­ர­ணை­க­ளைப் பூர்த்தி செய்து குற்­ற­வா­ளி­களை சட்­டத்­தின் முன் நிறுத்த மகிந்­த­ ரா­ஜ­பக்ச அரசு எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்­லை­யென குற்­றம் சுமத்­தி­யி ­ருந்­தார்.

திருகோணமலை மாணவர்கள் படுகொலை விவகாரத்தில் தற்போதும் தொடரும் அழுத்தங்கள்

ஜன­வரி 25 ஆம் திகதி 2006 ஆம் ஆண்டு சுட­ரொ­ளிப் பத்­தி­ரி­கை­யின் ஊட­க­வி­ய­லா­ள­ரான சுகிர்­த­ரா­ஜன் திரு­கோ­ண­மலை உவர்­ம­லை­யில் காலை வேளை சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார். இவர் தி­ரு­கோ­ண­ம­லை ­யில் இடம் பெற்ற மாண­வர்­க­ளின் படு­கொலை சம்­பந்­த­மாக உண்­மைச்­செய்­தி­களை துணிச்­சலு­டன் வெளியிட்­டி­ருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

திரு­கோ­ண­மலை மாண­வர்­கள் படு­கொலை தொடர்­பில் தாம­த­மா­கும் நீதி மறுக்­கப்­பட்ட நீதிக்­குச்­ச­மம் என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத்­தூ­து­வர் அதுல்­கே­சாப் அண்­மை­யில் தனது ருவிட்­ட­ரில் பதிவு செய்­தி­ருந்­தார்.

பிர­தான சாட்சி வெளிநாட்­டில் இருப்­ப­த­னால் இந்த வழக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­மு­டி­ய­வில்லை என­வும், இந்த நிலை­யில் ஸ்கைப் தொழில் நுட்­பத்­தி­னூ­டாக வழக்கை முன்­னெ­டுப்­ப­ தாகவும் அமைச்­ச­ரான சாக­ல­ரட்­னா­யக்கா அமெ­ரிக்­கத்­தூ­து­வ­ரான அதுல் கேசாப்­பிற்கு பதி­ல­ளித்­துள்­ளார்.

இன்­றைய கூட்டு அர­சு­கூட இந்த வ­ழக்கு ச் சம்­பந்­த­மாக வாய்­மூடி இருக்­கின்ற நிலை­யில், அமெ­ரிக்­கத்­தூ­து­வ­ரின் கருத்து ஐந்து மாண­வர்­க­ளின் படு­கொலை சம்­பந்­த­மான 12 ஆவது நினைவு மாத­மான தற்­போ­தைய ஜன­வரி மாத ஆரம்­பத்­தில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. இதற்­கான நீதி எப்­போது கிடைக்­கும் என்று 12 ஆண்­டு­க­ளாக அவர்­க­ளது உற­வு­கள் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

தமிழ்த்­தே­சி­யத்­திற்­காக தன்­னந்­த­னி­யாக நின்று குரல் கொடுத்த சட்­டத்­த­ர­ணி­யான குமார் பொன்­னம்­ப­லம் 2000 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 5 ஆம் திக­தி­யன்று, முன்­னை­நாள் ஜனா­தி­ப­தி­யான சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆட்­சிக் காலத்­தில் கொழும்­பில் வைத்து பகல் வேளை­யில் சுட்­டுக்­கொல் பப்­பட்­டி­ருந்­தார்.

அது தமி­ழி­னத்­தின் பெரிய இழப்­பாக அமைந்­தி­ருந்­தது.போர் இறு­திக்­கா­லப்­ப­கு­தி­யில், 2008, 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாத­கா­லப் பகு­தி­க­ளில் வன்னி பெரு­நி­லப் பரப்பில் மகிந்த அர­சின் ஆத­ர­வு­டன் படை­யி­னர் பெருந்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு பல அப்­பா­வித் தமிழ் மக்­க­ளைப் படு­கொலை செய்­தி­ருந்­த­னர்..

2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2 ஆம் திக­தி­ய­ள­வில் படை­யி­னர் கிளி­நொச்­சி­ யைக் கைப்­பற்­றிய பின்­னர் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­ருந்த மக்­கள் சகலரும் முல்­லைத்­தீவு மாவட்­டத்துக்கு இடம்­பெ­யர்ந்து சென்­ற­தும், ஜன­வ­ரி­மா­தத்­தி­லேயே ஆகும். தமி­ழி­னத்துக்கு எ­தி­ரான சிங்­கள அர­சு­க­ளின் நட­வ­டிக்­கை­கள் யாவும் காலத்­தின் முக்­கிய பதி­வு­க­ளா­கும்.

மகிந்த ஆட்­சி­யின்­போது சில ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கொல்­லப்­பட்­டும், கடத்­தப்­பட்டு மிருந்­த­னர். 2008 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முத­லாம் திகதி, ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான தியா­க­ராசா மகேஸ்­வ­ரன் கொழும்­பி­லுள்ள இந்து ஆல­யத்­தின் முன் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார்.

ஜன­வரி 6 ஆம் திகதி சிரச ஊடக வலை­ய­மைப்பு மீது குண்­டுத்­தாக்­கு ­தல் நடத்­தப்­பட்­டது. ஜன­வரி 8 ஆம் திகதி சண்டே லீடர் பத்­தி­ரி­கை­யின் ஆசி­ரி­ய­ரான லசந்த விக்­கி­ர­ம­துங்க கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தார்.

ஜன­வரி 24 ஆம் திகதி ஊட­க­வி­ய­லா­ளர் பிர­கீத் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்­டார்.இப்­ப­டிப்­பட்­ட­பல சம்­ப­வங்­க­ளு­டன் பல ஆண்­டு­க­ளின் ஜன­வ­ரி­மா­தம் பின்­னிப் பிணைந்­த­தான வர­லாற்­றுப் பதி­வு­கள் இலங்­கை­யின் கறை­ப­டிந்த வர­லா­று­க­ளாக அமைந்­து­விட்­டுள்­ளன.